October 19, 2020
தண்டோரா குழு
இந்து முன்னணி யின் நிறுவன தலைவர் மறைந்த இராம கோபால் ஜியின் இலட்சிய பணியான இந்து மக்களின் உரிமை பாதுகாக்க இந்து பாரத் சேனா அமைப்பினர் தொடர்ந்து பாடுபடுவோம் என கோவையில் நடைபெற்ற வீரத்துறவி இராமகோபாலன்ஜி க்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் ஹிந்து பாரத் சேனாவினர் தெரிவித்துள்ளனர்.
இந்து முன்னணி நிறுவன தலைவர் வீரத்துறவி இராமகோபாலன் மறைந்ததை தொடர்ந்து இந்து அமைப்பினர் உட்பட பல்வேறு அமைப்பினர் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் கோவையில் ஹிந்து பாரத் சேனா சார்பாக வீரத்துறவி இராமகோபாலன் ஜி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நல்லாம்பாளையம் பகுதியில் நடைபெற்றது. நிறுவன தலைவர் வீராராஜா தலைமையில் நடைபெற்ற இதில் மாநில பொதுசெயலாளர் சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் சதீஷ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.தொடர்ந்து கந்தலோகம் முருகனடிமை பாஸ்கரானந்தா சுவாமிகள் மறைந்த இராம கோபாலன் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தினார்.தொடர்ந்து அனைவரும் அவரது திருவுருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பாஸ்கரனந்தா சுவாமிகள்,
மறைந்த இராம கோபால் ஜியின் இலட்சிய பணியாக இந்து மக்களின் உரிமை பாதுகாக்க இந்து பாரத் சேனா அமைப்பினர் தொடர்ந்து பாடுபடுவோம் என தெரிவித்தார். நிகழ்ச்சியில் கோவை மாவட்ட தலைவர் இருகூர் உமாநாத்,மாநில பொருளாளர் கந்த லோகம் செல்வராஜ்,சுப்ரமணியம்,மாநில மகளிர் அணி வீரத்தமிழச்சி, மற்றும் செய்தி தொடர்பாளர் ஸ்டோன் சரவணன்,டவுன் ஹால் பிரபு, ராமகிருஷ்ணன், வேலு, மனோகரன், மகேஷ்,படையப்பா,பாரதி நகர் பார்த்திபன், சரவணன்,வினோத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.