• Download mobile app
19 Apr 2024, FridayEdition - 2991
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இந்தி மொழியை திணித்தால் தமிழ்நாட்டில் யாரும் ஏற்க மாட்டார்கள் -ரஜினி

September 18, 2019 தண்டோரா குழு

இந்தி மொழியை திணித்தால் தமிழ்நாட்டில் யாரும் ஏற்க மாட்டார்கள் என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

இந்தி நாளன்று இந்தி குறித்து அமித்ஷா தெரிவித்த கருத்து நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.அமித்ஷாவின் கருத்திற்கு தமிழக அரசியல் தலைவர்கள் எதிர்ப்புக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த்,

இந்தி மொழியை திணித்தால் தமிழ்நாட்டில் யாரும் ஏற்க மாட்டார்கள். பொதுமொழி என ஒன்று இருந்தால் தான் நாட்டின் வளர்ச்சிக்கு நல்லது . துரதிர்ஷ்டவசமாக நமது நாட்டில் பொதுவான மொழியை கொண்டு வர முடியாது. தமிழ்நாட்டில் மட்டுமல்ல.. தென்னிந்தியாவிலும், வட இந்தியாவிலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்றார்.

சென்னையில் பேனர் கீழே விழுந்ததால் ஏற்பட்ட விபத்து காரணமாக, இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்தது குறித்த கேள்விக்குப் பதில் அளித்த ரஜினி, தமிழகத்தில் பேனர் கலாச்சாரம், முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும், எனவும் ஏற்கனவே ரசிகர்களுக்கு அதனை வலியுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க