• Download mobile app
05 May 2024, SundayEdition - 3007
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இந்திய வாக்காளர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்திய கூகுள் டூடுள் !

April 11, 2019 தண்டோரா குழு

நாடு முழுவதும் முதல் கட்டமாக மக்களவை தேர்தல் இன்று தொடங்கிய நிலையில் பொதுமக்கள் வாக்களிக்க ஊக்குவிக்கும் வகையில் முகப்பு படத்தை கூகுள் இணையத்தளம் மாற்றியுள்ளது.

நாடு முழுவதும் 543 தொகுதிகளுக்கான மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடத்தப்பட உள்ளது. இத்துடன், ஆந்திரா, சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம், ஒடிசா மாநில சட்டப்பேரவை தேர்தலும் நடத்தப்படுகிறது. அந்த வகையில் முதல் கட்டமாக 20 மாநிலங்களில் 91 தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கிய நிலையில், மக்கள் முன்னதாகவே வாக்குப்பதிவு மையங்களுக்கு ஆர்வமுடன் வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் வாக்காளர்களை ஊக்குவிக்கும் விதமாக இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் பல்வேறு சமுக அமைப்புகள் வாக்காளர்களை ஊக்குவிக்கும் விதமாக நாடு முழுவதிலும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்து வந்தன. மேலும் சமூக வலைதளங்களிலும் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விளம்பரமும் செய்து வந்தது. இந்நிலையில் இன்று 17-வது மக்களவை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு 91 தொகுதிகளில் இன்று தொடங்கியது. இதனை தொடந்து வாக்குப்பதிவின் அவசியத்தை குறிக்கும் விதமாக கூகுள் இணையதளம், தனது முகப்பு பக்கத்தில் பொதுமக்கள் வாக்களிக்க ஊக்குவிக்கும் வகையில் முகப்பு படத்தை மாற்றியுள்ளது.

அந்த படத்தை கிளிக் செய்தால், எப்படி வாக்களிப்பது? என்னென்ன ஆவணங்களை எடுத்து செல்லவேண்டும்? உள்ளிட்ட விவரங்கள் காண்பிக்கப்படுகின்றன.

மேலும் படிக்க