• Download mobile app
28 Mar 2024, ThursdayEdition - 2969
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இந்திய ராணுவத்திற்கான ஆள்சேர்ப்பு முகாம் மோசடி நபர்களை நம்பி ஏமாற வேண்டாம் – ஆட்சியர் வேண்டுகோள்

January 4, 2021 தண்டோரா குழு

கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழக விளையாட்டரங்கில் வரும் 18ம் தேதி முதல் 30ம் வரை இந்திய ராணுவத்திற்கான ஆள்சேர்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இதற்கான முன்னேற்பாட்டு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம், மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஆட்சியர் ராஜாமணி தலைமையில் நடைபெற்றது.

பின்னர் ஆட்சியர் தெரிவித்ததாவது:

கோவை ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலகத்தின் கீழ் தமிழகத்திலுள்ள நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திண்டுக்கல், மதுரை, தேனி, திருப்பூர் மற்றும் கோவை ஆகிய 11 மாவட்டத்தில் இருந்து ஆட்களை ராணுவத்தில் சேர்ப்பதற்கான முகாம் வரும் 18ம் தேதி முதல் 30ம் தேதி வரை பாரதியார் பல்கலைகழக விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது.

இத்தேர்வுக்கு இணைய வழியாக ஏற்கனவே, விண்ணப்பத்திருந்த விண்ணப்பதாரர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். நுழைவு சீட்டு இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நுழைவு சீட்டு கொண்டுவரும் தேர்வர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

மேலும் விவரங்களுக்கு விண்ணப்பத்தாரர்கள் ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலகம், கோவை 0422-2222022 என்ற தொலைப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இம்முகாம் வெளிப்படைத் தன்மையுடன் நடைபெறவுள்ளது. விண்ணப்பதாரர்கள் யாரும் வேலை பெற்று தருவதாக கூறும் மோசடி நபர்களை நம்பி ஏமாற வேண்டாம்.தகுதியின் அடிப்படையில் தான் இத்தேர்வு நடைபெறும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் இயக்குநர்(ஆள்சேர்ப்பு) கர்னல் ராவத், மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரைமுருகன், மாநகராட்சி துணை கமிஷனர் மதுராந்தகி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க