• Download mobile app
08 Apr 2026, WednesdayEdition - 3710
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்திய மருத்துவ சங்கம் சார்பில் புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி

February 11, 2023 தண்டோரா குழு

இந்திய மருத்துவ சங்கம் கோவை கிளை சார்பில் மாபெரும் புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி இன்று காலை நடைபெற்றது.

பேரணியை இந்திய மருத்துவ சங்கத்தின் தலைவர் துரைக்கண்ணன், செயலாளர் கோசல் ராம், பொருளாளர் சீதாராமன், இணைச் செயலாளர் த. பரமேஸ்வரன், லயன் ராஜசேகர் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். பேரணியானது கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள மாசாணி மருத்துவமனை முன்பு தொடங்கி ஜே.டி அலுவலகத்தில் நிறைவடைந்தது.

இதில் ஆர்.வி.எஸ் நர்சிங் கல்லூரியை சேர்ந்த மாணவ, மாணவிகள் 250க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.இவர்கள் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பாதகைகளை கையில் ஏந்தி வந்தனர்.அப்போது புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொது மக்களிடையே வழங்கி விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர்.

நிகழ்ச்சியில் மருத்துவர்கள், செவிலியர்கள், ஆர்.வி.எஸ் நர்சிங் கல்லூரி முதல்வர் லதா, ஒருங்கிணைப்பாளர் சிவமதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க