• Download mobile app
29 Mar 2024, FridayEdition - 2970
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இந்திய பொருளாதார நிலை சீராக உள்ளது, சிறு சிறு குறைபாடுகள் களையப்படும் – நிர்மலா சீதாராமன்

August 23, 2019 தண்டோரா குழு

“தொழில் நிறுவனங்களை இணைக்கவும், வாங்கவும் எளிதில் அனுமதி வழங்கப்படும்” என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

நாட்டில் நிலவி வரும் பொருளாதார தேக்கநிலை தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்தார்.

அப்போது பேசிய அவர்,

அமெரிக்க, சீன வர்த்தக யுத்தத்தால் உலக அளவில் பொருளாதார வளர்ச்சியில் மந்தமான சூழல் நிலவுகிறது. சர்வதேச அளவில் பொருளாதார நிலை மோசமாக உள்ளது.சர்வதேச பொருளாதார ஜிடிபி 3.2% ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. அமெரிக்கா, ஜெர்மனி போன்ற வளர்ந்து நாடுகளிலும் பொருளாதார மந்த நிலை நிலவி வருகிறது. மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது, இந்திய பொருளாதாரம் நல்ல நிலையிலேயே உள்ளது. இந்திய பொருளாதாரம் தொடர்ந்து வேகமான வளர்ச்சியில் இருந்து வருகிறது. அமெரிக்கா மற்றும் சீனாவை விட இந்தியாவின் வளர்ச்சி விகிதம் அதிகம்.உலக அளவில் தேவை குறைந்துள்ளது – சீனா தனது கரன்சியின் மதிப்பை குறைத்தது பிரச்சனைக்கு காரணம்.

பொருளாதாரத்தை சரி செய்ய துணிச்சலான நடவடிக்கையை செய்து வருகிறோம்.எப்போதும் போல எங்களின் நடவடிக்கைகள் தொடரும்.நீண்ட கால, குறுகிய கால மூலதன ஆதாயங்கள் மீது இனி வரி கிடையாது. வெளிநாடு முதலீடுகள் மீதான கூடுதல் வரி விதிப்பு நீக்கப்படும்.கடந்த 2014ல் இருந்து சீர்திருத்தங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். மத்திய அரசின் முதன்மை பணியாக அதுவே உள்ளது.ஜி.எஸ்.டி இன்னும் எளிமையாக்கப்படும். ஜி.எஸ்.டி கவுன்சிலோடு வரும் ஞாயிற்றுக்கிழமை கலந்தாலோசித்து , பணம் திரும்ப செலுத்தும் முறையில் உள்ள சிக்கல்கள் களையப்படும்.

வரும் அக்டோபர் 1-ம் தேதியில் இருந்து வரி தொடர்பாக கொடுக்கப்படும் அனைத்து நோட்டீஸ்கள் மீதும், பதில் வந்த மூன்றே மாதத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். பங்கு சந்தையில் முதலீடு செய்ய ஊக்கங்கள் தரப்படும்.சமூக பொறுப்புணர்வு திட்டத்தை செயல்படுத்தாத பெரு நிறுவனங்கள் மீது இனி நடவடிக்கை இல்லை இதற்காக இனி பெரு நிறுவனங்கள் மீது கிரிமினல் நடவடிக்கை கிடையாது. தொழில் நிறுவனங்களை இணைக்கவும், வாங்கவும் எளிதில் அனுமதி வழங்கப்படும். ஒரே நாளில் தொழில் நிறுவனம் தொடங்குவதற்கான சூழ்நிலை உள்ளது. சட்ட விதிகள் தொடர்பான அனைத்து சிக்கல்களும் உடனுக்குடன் களையப்படுகிறது. சிறு, குறு நிறுவனங்களுக்கு பட்ஜெட்டில் அறிவித்த திட்டங்கள் தொடரும். மத்திய பட்ஜெட்டில் அறிவித்த அனைத்து திட்டங்களையும் அரசு நிறைவேற்றும். அனைத்து வரி சிக்கல்களும் ஒருங்கிணைக்கப்பட்டு தீர்வு காணப்படும் என்றார்.

மேலும் படிக்க