• Download mobile app
05 Sep 2025, FridayEdition - 3495
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்திய – பாகிஸ்தான் எல்லையில் நவீனவேலிகள் – கிரண் ரிஜிஜு

February 3, 2017 தண்டோரா குழு

இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் விரைவில் நவீன வேலிகள் அமைக்கப்படும் என மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் இணையமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியதாவது:

ஜம்மு-காஷ்மீர், ராஜஸ்தான், பஞ்சாப், குஜராத் ஆகிய 4 மாநிலங்களில் அண்டை நாடுகளுடன் சுமார் 3,323 கி.மீ., வரை உள்ளது. இந்திய எல்லைகளில் உள்ள வேலிகளைத் துண்டித்துவிட்டு பயங்கரவாதிகள் எல்லைக்குள் அடிக்கடி ஊடுருவுகின்றனர்.

அதைத் தடுப்பதற்காக எல்லையில் ‛சென்சார்’, கண்காணிப்பு கேரமாக்கள், ‛ரேடார்’ உள்ளிட்ட பாதுகாப்புக் கருவிகளுடன் கூடிய நவீன வேலிகள் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படும். அதற்காக நவீன வேலிகள் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் அடுத்த ஆண்டு இறுதிக்குள் முடிந்துவிடும்.

இவ்வாறு அமைச்சர் ரிஜுஜு தெரிவித்தார்.

மேலும் படிக்க