• Download mobile app
23 Mar 2026, MondayEdition - 3694
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்திய தேசிய லீக் தலைவர் தடா ரஹீம் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

February 21, 2018 தண்டோரா குழு

இந்திய தேசிய லீக் கட்சியின் மாநிலத் தலைவர் தடா அப்துல்ரஹீமை போலீசார் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

கடந்த ஆண்டு டிசம்பர் 28-ம் தேதிநெல்லையைச் சேர்ந்த மணல் வியாபாரி சையது முகமது புஹாரி தமது தோழியுடன் சென்னை மண்ணடியில் ஒரு விடுதியில் தங்கியிருந்த போது 4 பேர் கடத்திச் சென்றனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி ஆள் கடத்தலில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் இந்திய தேசிய லீக் கட்சியைச் சேர்ந்தவர்கள் எனவும், அவர்களில் சாகுல் ஹமீது என்பவருக்கு கொடுக்க வேண்டிய 40 லட்சம் ரூபாய் பணத்துக்காக புஹாரியை கடத்தியிருந்ததும் கண்டறியப்பட்டது.

இதையடுத்து ஆள் கடத்தலுக்கு தூண்டியதாக கடந்த 12-ம் தேதி இந்திய தேசியலீக் கட்சியின் மாநிலத்தலைவர் தடா அப்துல் ரஹீமையும் திருவல்லிக்கேணி போலீசார் கைது செய்தனர். இந்நிலையில்,அவர் மீது, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிய காவல் ஆணையர் உத்தரவிட்டதன் பேரில் அவர் ஓராண்டு சிறையில் குண்டர் தடுப்புக் காவலில் வைக்கப்படுகிறார்.

 

மேலும் படிக்க