• Download mobile app
03 May 2024, FridayEdition - 3005
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இந்திய ஜனநாயக கட்சி சார்பில் சமத்துவ பொங்கல் விழா

January 22, 2024 தண்டோரா குழு

உழைக்கும் மக்கள் தமது உழைப்பிற்கு உதவிய இயற்கைக்கும், சூரியனுக்கும், கால்நடைகளுக்கும், தமது நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் நாளை பொங்கல் திருநாளாக தமிழ் மக்கள் கொண்டாடி வருகிறார்கள்.

இந்நிலையில் இந்த ஆண்டு பொங்கல் விழாவினை தனது சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை வட்டத்தில் உள்ள திருவடிமிதியூர் கிராமத்தில் ஏழை எளிய மக்களுக்கும், கட்சி தொண்டர்களுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கி பொங்கல் பண்டிகையை கொண்டாடினார் டாக்டர் லீமா ரோஸ் மார்டின்.

இந்திய ஜனநாயக கட்சியின் இணை பொதுச்செயலாளர் டாக்டர் லீமா ரோஸ் மார்டின் தலைமையில் நடைபெற்ற இந்த பொங்கல் விழாவில், ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் ஆல்பர்ட் ராஜா முன்னிலை வகிக்க கட்சியின் அமைப்பு செயலாளர் AKT வரதராஜன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

திருவடிமிதியூர் கிராமத்தில் வசிக்கும் தனது உறவினர்கள், நண்பர்கள், ஊர் மக்கள் மற்றும் கட்சி தொண்டர்களுடன் 101 பானைகளில் பொங்கல் வைத்து அதனை சூரியனுக்கும், கால்நடைகளுக்கும் படையலிட்டு கொண்டாடி மகிழ்ந்தனர். மேலும் இந்த ஆண்டு பொங்கல் விழாவில் உரி அடித்தல், சிலம்பாட்டம், கயிறு இழுத்தல், மியூசிக்கல் சேர் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் பங்கேற்று வென்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.

பொங்கல் விழாவில் பங்கேற்ற அந்த சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கும், கட்சி தொண்டர்களுக்கும் அரிசி, பருப்பு, எண்ணெய், வேட்டி சட்டை, சேலை, போர்வை இவற்றை உள்ளடக்கிய பொங்கல் பரிசு தொகுப்பை இலவசமாக வழங்கினார் டாக்டர் லீமா ரோஸ் மார்டின். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் மதிய உணவாக கறி விருந்து வழங்கப்பட்டது.

இந்த பொங்கல் விழாவில் குளோரி ஜான் பிரிட்டோ, மாநில மகளிர் அணி இணைச் செயலாளர்,KPN சீனிவாசன், புதுக்கோட்டை மாவட்ட தலைவர், முத்துராஜா, நாமக்கல் மாவட்ட தலைவர்,ஞானசேகர், மதுரை வடக்கு மாவட்ட தலைவர், A. அமலன் சவரிமுத்து, மாநில இளைஞரணி துணை செயலாளர்,S. சிமியோன் சேவியர் ராஜ், மாநில போராட்டக்குழு செயலாளர்,
P. லீலா பாய், மாநில மகளிரணி துணைச் செயலாளர், கவிதா திருநாவுக்கரசு, மாநில மகளிரணி துணை செயலாளர் Dr. லதா பிரேம், மாநில மகளிரணி அமைப்புச் செயலாளர் உள்ளிட்ட கட்சி தொண்டர்கள் , ஊர் பொதுமக்கள் என பலர் பங்கேற்றனர்.

மேலும் படிக்க