• Download mobile app
20 Mar 2026, FridayEdition - 3691
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்திய உணவுகளுக்கு தடைவிதித்த எமிரேட்ஸ் நிறுவனம் பயணிகள் அதிர்ச்சி !!

July 4, 2018 தண்டோரா குழு

துபாயில் இருந்து வரும் எமிரேட்ஸ் விமானத்தில் இந்திய உணவு வகைளுக்கு தடை விதிப்பதாக எமிரேட்ஸ் விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

சர்வதேச நாடுகளுக்கு செல்லும் இந்தியர்களுக்கு அந்தந்த நாட்டு விமான நிறுவனங்கள் இந்தியர்களின் விருப்ப உணவு வகைகளை மெனுவாக வைத்து வழங்கிவருகிறது. அந்த வகையில் துபாயை மையமாகக் கொண்டு செயல்படும் சர்வதேச விமான நிறுவனம் எமிரேட்ஸ். இந்நிறுவனம் சார்பில் உலகின் பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. விமானத்தில் செல்லும் பயணிகளுக்காக சர்வதேச விமான நிறுவனங்கள் பல வகையான உணவுகளை தயாரித்து கொடுப்பது வழக்கம்.

இந்நிலையில் எமிரேட்ஸ் நிறுவனம், தனது விமான சேவைகளிலிருந்து இந்திய உணவுகளுக்கு தடை விதித்து அதற்கான மெனுவையும் நீக்குவதாக தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக எமிரேட்ஸ் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

“எங்கள் நிறுவனம் சுகாதார மற்றும் உணவு தேவைகளுக்கு ஏற்ப மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. வாடிக்கையாளர்களின் விருப்பத்தை கருத்தில் கொள்வது எங்கள் சேவைத் திறனை மேம்படுத்த துணைபுரியும். அத்துடன், பயணிகள் விமானத்தில் கொடுக்கப்படும் இந்திய உணவு வகை அல்லாத சைவ மற்றும் அசைவ உணவுகளை தேர்வு செய்து கொள்ளலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலால் இந்திய பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மேலும் படிக்க