• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இந்திய அணியின் கேப்டனிடமிருந்து இப்படி ஒரு முட்டாள் தனமான வார்த்தைகளா?” – நடிகர் சித்தார்த்

November 8, 2018 தண்டோரா குழு

இந்திய அணியின் கேப்டனிடமிருந்து இப்படி ஒரு முட்டாள்தனமான வார்த்தைகளா?” என நடிகர் சித்தார்த் கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலி பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற வெஸ்ட் விண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஹாட்ரிக் சதங்கள் அடித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். மேலும் அதிவேகமாக 10,000 ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையும் இவரையே சாரும்.

இதற்கிடையில். விராத் கோலியை விமர்சனம் செய்து அவரது டுவிட்டர் பக்கத்தில் ரசிகர் ஒருவர் கருத்து ஒன்றை பதிவு செய்துள்ளார் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்பதிவில் விராத் கோலியை எல்லோரும் வியந்து பார்க்கின்றனர், அவரை கொண்டாடுகின்றனர், கோலி சிறந்த பேட்ஸ்மேன் தான், வியந்து பார்க்கும் அளவிற்கு திறமை இருப்பதாக தெரியவில்லை, ஆனால் அவரை காட்டிலும் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து வீரர்களின் பேட்டிங்கை நான் மிகவும் ரசித்து பார்க்கிறேன். என்று குறிப்பிட்டு இருந்தார்.

இதை தொடந்து அந்த ரசிகரின் கமெண்ட்க்கு தனது பெயரில் உருவாக்கப்பட்ட செயலியில் வீடியோ முலம் பதிலலித்த விராத் கோலி ” இந்தக் கருத்தை தெரிவித்தவர், இந்தியாவில் வசிக்க வேண்டும் என்று அவசியமில்லை. இந்தியாவை விட்டு வெளியேறி வேறு எங்காவது சென்று வாழலாம். மற்ற நாடுகளை விரும்பிக்கொண்டு ஏன் எங்கள் நாட்டில் வாழ வேண்டும்? உங்களுக்கு என்னைப் பிடிக்கவில்லை என்பதற்காக நான் கவலைப்படவில்லை, அதனால் இப்படிப் பேசவில்லை. மற்ற நாடுகளை விரும்பிக்கொண்டு ஏன் இந்தியாவில் வசிக்க வேண்டும். உங்களுக்கு எது முன்னுரிமை என்று நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்” என்று பதிலலித்துதுள்ளார். விராட் கோலியின் இந்த கருத்து சமுக வலைதளங்களில் பெரும் வைரலானது.
இந்நிலையில் நடிகர் சித்தார்த் கேப்டன் கோலிக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவுரை வழங்கியுள்ளார்.

அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,

“நீங்கள் இனிமேலும் கிங்கோலி என்ற அடைமொழியை தக்க வைத்துக் கொள்ள விரும்புகிறீர்கள் என்றால் உங்களுக்கு நீங்கள் பாடம் கற்பித்துக் கொள்ளும் தருணம் வந்துவிட்டது என்றே அர்த்தம். அடுத்த முறை எதிர்காலத்தில், இது போன்ற சூழலில் டிராவிட்டாக இருந்தால் என்ன சொல்லியிருப்பார் என்பதை யோசித்துப் பேசுங்கள். இந்திய அணியின் கேப்டனிடமிருந்து இப்படி ஒரு முட்டாள்தனமான வார்த்தைகளா?” என்று தனது பக்கத்தில் பதிவிட்டுளார்.

மேலும் படிக்க