November 10, 2017
தண்டோரா குழு
இந்தியா – வங்கதேசம் இடையே,புதிய ரயில் சேவையை பிரதமர் மோடியும்,வங்கதேச பிரதமர் ஹசீனாவும் துவக்கி வைத்தனர்.
இந்தியா – வங்கதேசம் இடையே,’பந்தன்’பயணியர் ரயில் சேவையை பிரதமர் மோடியும்,வங்கதேச பிரதமர் ஹசீனாவும் துவக்கி வைத்தனர்.இந்த புதிய ரயில் சேவை இந்தியாவின் கோல்கட்டாவில் இருந்து வங்கதேசத்தின் தொழில் நகரமான, குல்னாவுக்கு இயக்கப்படும்.
பந்தன் ரயில் சேவையை, டில்லியில், பிரதமர் மோடியும், தாகாவில், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவும், ‘வீடியோ கான்பரன்ஸ்’ மூலம் துவக்கி வைத்தனர். மேலும்,இரு நாடுகளுக்கு இடையே உள்ள நட்புறவை குறிக்கும் வகையில், ரயிலுக்கு, ‘பந்தன்’ என, பெயரிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.