• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்தியா – பாகிஸ்தான் போட்டி 30 நொடி விளம்பரத்திற்கு ரூ.1 கோடி !

June 17, 2017 தண்டோரா குழு

இந்திய – பாகிஸ்தான் அணிகள் மோதும் கிரிக்கெட் போட்டியை பார்க்க ரசிகர்களை விட அந்த போட்டியின் போது விளம்பரம் கொடுக்க விளம்பரதாரர்களே மிக ஆர்வமாக உள்ளனர்.

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் நாளை மோதவுள்ளன.

இப்போட்டியினை உலக கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருகின்றனர். ஏனெனில் பத்து ஆண்டுகளுக்கு பிறகு இவ்விரு அணிகளும் இறுதி போட்டியில் மோதுகின்றன. இதற்கு முன் 2007ம் டி20 உலககோப்பையில் மோதி இந்தியா அதில் வெற்றி பெற்றது.

இந்தியா – பாகிஸ்தான் போட்டி என்றாலே அதில் விறுவிறுப்பு பஞ்சம் இருக்காது இதனால் தான் இரு அணியையும் ஒரே குரூப்பில் வைக்கிறது ஐசிசி. இதன் காரணமாக இந்த தொடரில் இந்தியா விளையாடிய முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொண்டு, 124 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில்,நாளை நடைப்பெற உள்ள இறுதிப்போட்டிமிகுந்த எதிபார்ப்புடன்காணப்படும் என்பதால் விளம்பரத்திற்கான தொகையும் மிக அதிகமாக உள்ளது.இதுவரை இந்த போட்டியின் போது ஒளிபரப்பப்பட உள்ள விளம்பரங்கள் 90% நிரம்பிவிட்டது. இன்னும் 10% விளம்பரங்கள் தான் இன்னும் உள்ளன.இந்த போட்டியின் போது ஒளிப்பரப்பப்படும் ஒவ்வொரு விளம்பரத்திற்கும் 30 வினாடிக்கு 1 கோடி ($155,267) ரூபாய் வசூலிக்கப்பட உள்ளது.

இந்த தொகை மற்ற போட்டிகளின் போது வசூலிப்பதை விட 1 மில்லியன் (10 லட்சம்) அதிகம்.இவ்வளவு பெரிய தொகை நிர்ணயிக்கப்பட்டிருந்தும், இந்த போட்டியில் தங்களது விளம்பரம் கொடுக்க அலைமோதுகின்றது நிறுவனங்களின் கூட்டம்.

காரணம், இந்த போட்டியின் போது 30 முதல் 40 சதவீதம் பார்வையாளர்கள் அதிகமாக பார்ப்பார்கள் என்பதால் தான்.

மேலும் படிக்க