• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்தியா – பாகிஸ்தான் இடையேயான பிரச்சனை சுமுகமாக தீரும் – அமெரிக்க அதிபர் டிரம்ப்.

February 28, 2019 தண்டோரா குழு

கடந்த 2 நாட்களாக இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இரு நாடுகளிடையே பிரச்சனை சுமூகமாக முடியும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

கடந்த பிப். 14ல் நடந்த புல்வாமா தாக்குதலை தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் இடையே தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. இரு நாட்டு எல்லையிலும் உஷார் நிலையில் ராணுவ வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், பல்வேறு உலக நாடுகள் இந்தியாவிற்கு ஆதரவு அளித்து வருகிறது. அதைப்போல் பாகிஸ்தானை கண்டித்தத்தும் வருகிறது. நேற்று அமெரிக்கா சார்பில் பாகிஸ்தான் தீவிரவாதத்தை ஒழிக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தது.

இந்நிலையில் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் – உடனான சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப் “ இந்தியா பாகிஸ்தானிடமிருந்து விரைவில் நல்ல செய்தி வரும் என்றும், இந்த விவகாரம் விரைவில் முடிவுக்கு வரும்.இரு நாடுகளிடையே நிலவும் பதற்றத்தை குறைக்க அமெரிக்க தலையிட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க