• Download mobile app
04 Sep 2025, ThursdayEdition - 3494
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்தியாவை உலகளவில் உயர்த்துவோம்:தேசியப் பங்குச்சந்தை நிர்வாக இயக்குனர் ஆசிஷ்குமார் சவுகான் சுதந்திர தின வாழ்த்து

August 17, 2024 தண்டோரா குழு

78வது சுதந்திர தினத்தையொட்டி தேசியப் பங்குச்சந்தை நிர்வாக இயக்குனரும் தலைமை செயல் அதிகாரியுமான ஆசிஷ்குமார் சவுகான் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவின் 78வது சுதந்திர தினத்தையொட்டி, ஒரு முற்போக்கான மற்றும் வளமான நாட்டை உருவாக்க பாடுபட்ட நமது சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகங்களை இந்நாளில் போற்றி வணங்குவோம். உலக அளவில் இந்தியாவை பொருளாதாரத்தில் முன்னணி நாடாக உருவாக்க இந்நாளில் நாம் சபதம் ஏற்போம்.

வலுவான கட்டமைப்பு கொண்ட தேசமாக இந்தியாவை உருவாக்குவோம். நமது தேசத்தை உயர்த்துவதற்கான அதன் தொடர்ச்சியான முயற்சிகளில் முதலீட்டாளர் விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பிற்காக தேசியப் பங்குச்சந்தை தொடர்ந்து மூலதனச் சந்தையில் சிறப்பான கவனம் செலுத்தி வருகிறது. அனைவருக்கும் எனது சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்க