• Download mobile app
16 Jan 2026, FridayEdition - 3628
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்தியாவுக்கான ரஷ்யத் தூதர் அலெக்சாண்டர் கடாகின் மறைவு

January 26, 2017 தண்டோரா குழு

இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் அலெக்சாண்டர் கடாகின் ரஷ்யாவில் வியாழக்கிழமை (ஜனவரி 26) காலமானார். அவருக்கு வயது 67.

கடந்த 2௦௦9ம் ஆண்டு முதல் இந்தியாவுக்கான ரஷ்யத் தூதராக அவர் பணியாற்றினார். அவர் உடல் நலக் குறைவால் ரஷ்யாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி மாரடைப்பால் வியாழக்கிழமை காலமானார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது இரங்கல் செய்தியில், “அலெக்சாண்டர் கடாகின் மறைவு ஆழ்ந்த வருத்தத்தைத் தருகிறது. அவர் போற்றத்தக்கத் தூதர், இந்தியாவிற்கு நல்ல நண்பர், இந்திய ரஷ்ய உறவுகள் உறுதியாக இருக்க வேண்டும் என்று பாடுப்பட்டவர்” என்று ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்திய வெளியுறவுத் துறையின் செய்தி தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் தனது “ட்விட்டர்” பக்கத்தில் கூறியதாவது, “அலெக்சாண்டர் கடாகின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்கிறேன். அவருடைய மரணத்தால் ஒரு தனிச்சிறப்பு வாய்ந்த தூதரக அதிகாரியை, நல்ல நண்பரை இழந்து விட்டோம்” என்று பதிவிட்டுள்ளார்.

அலெக்சாண்டர் கடாகின் ஒன்றுபட்ட சோவியத் யூனியனில் சிசினு என்னும் இடத்தில் 1949ம் ஆண்டு பிறந்தார். 1972ம் ஆண்டு மாஸ்கோ நகரில் உள்ள சர்வதேச உறவுகள் கல்வி நிலையத்தில் பட்டம் பெற்றார். 1972ம் ஆண்டு இந்தியாவில் உள்ள ரஷ்ய தூதரகத்தில் மூன்றாவது செயலாளராக தனது தூதரகப் பணியைத் தொடங்கினார்.

மேலும் படிக்க