• Download mobile app
07 May 2025, WednesdayEdition - 3374
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இந்தியாவில் காற்றாலை மின் உற்பத்தியில் தமிழகம் முதலிடம் – அமைச்சர் தங்கமணி

February 5, 2018 தண்டோரா குழு

கோவையில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் அகில இந்திய மின்வாரியங்களுக்கு இடையிலான கூடைபந்து இறுதி போட்டி நடைப்பெற்றது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் அகில இந்திய மின்வாரியங்களுக்கு இடையிலான கூடைபந்து இறுதி போட்டியில் பரிசளிப்பு விழாவில்  அமைச்சர் தங்கமணி  பங்கேற்றார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

மின்வாரிய ஊழியர்களின் ஊதிய உயர்வு  பேச்சுவார்த்தைக்கு   அழைப்பு விடுக்கும் போதே ஒரு சில சங்கங்கள்  வேலை நிறுத்ததில் ஈடுபடுவதாக அறிவிக்கின்றனர்.இது உள்நோக்கம் கொண்டது.

காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியாவில்  தமிழகம் முதலிடம் வகிப்பதாகவும், புதிய வழித்தடம் மூலம் 150 மெகா வாட்  கொடுக்கப்படுவதாகவும்,   500 புதிய வழித்தடம் ஏற்படுத்த நடவடிக்கை  எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

உதய் மின் திட்டத்தில் இணைந்த பிறகுதான் 13 ஆயிரம் கோடி இருந்த கடன் தற்போது 4000 கோடியாக குறைந்து இருப்பதாகவும், அடுத்த ஆண்டில் இந்த ஆண்டில் இந்த கடன் தொகை மேலும் குறைக்கப்படும்.

நிலக்கரி இறக்குமதி கடந்த இரண்டு ஆண்டுகளில் தேவையானவற்றை மத்திய அரசே கொடுத்ததாகவும், தற்போது நிலக்கரி உற்பத்தி மழையினால் பாதிக்கப்பட்டுள்ளதால் , இறக்குமதி செய்ய அனுமதி அளித்துள்ளதாக தெரிவித்தார்.

 

 

 

 

மேலும் படிக்க