• Download mobile app
08 Nov 2025, SaturdayEdition - 3559
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்தியாவிலேயே முதல் முறையாக கேரள காவல் துறையில் KP-BOT ரோபோ அறிமுகம் !

February 20, 2019 தண்டோரா குழு

இந்தியாவிலேயே முதல் முறையாக கேரள அரசு காவல் துறையில் ரோபோ ஒன்றை பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளது.

திருவனந்தபுரத்தில் உள்ள கேரளா காவல்துறை தலைமை அலுவலகத்தில், அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் KP-BOT எனப்படும் ரோபோக்களின் பணியை துவக்கி வைத்தார். இதன் மூலம் காவல் துறையில் ரோபோக்களை இயக்கும் நாடுகளில் இந்தியா நான்காவது நாடாக மாறியுள்ளது.

இந்த ரோபோ காவல் தலைமையகத்திற்கு வருவோருக்கு வழிகாட்டி அதிகாரிகளுடன் நேரம் நிர்ணயிக்க உதவி செய்கிறது. மேலும் காவல்துறை பணியில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த ரோபோ அறிமுகப்பட்டுள்ளதாக டிஜிபி லோகநாத் பெஹ்ரா விளக்கினார். மேலும், காவல் அதிகாரி போலவே இந்த ரோபோவுக்கு உடை அணிவிக்கப்பட்டுள்ளது பலரையும் கவர்ந்துள்ளது.

நான்கு பேர் செய்யக் கூடிய பணியை இந்த ரோபோ தனியாக சமாளிக்கும் திறன் கொண்டது. புகார்கள் அடிப்படையில் வழக்கு தொடர்பான கோப்புகளைத் தயாரித்தல், விருந்தினர்களுக்கு அடையாள அட்டை வழங்குதல் போன்ற பல்வேறு பணிகளை இந்த KP-BOT வகை ரோபோ செய்து முடிக்கும் திறன் கொண்டது.

மேலும் படிக்க