• Download mobile app
06 Nov 2025, ThursdayEdition - 3557
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்தியாவிலேயே முதல் முறையாக சென்னையில் டிராபிக் ரோபோ விரைவில் அறிமுகம் !

January 14, 2019 தண்டோரா குழு

இந்தியாவிலேயே முதல் முறையாக சென்னையில் டிராபிக் ரோபோ அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

சென்னையில் போக்குவரத்து பிரச்சினையை சரி செய்ய முடியாமல் போலீசார் தவித்து வருகின்றனர். ஒருபுறம் பல்வேறு இடங்களில் சிக்னல் வசதி இருந்தும் அதனை வாகன ஓட்டிகள் மதிப்பதில்லை மறுபுறம் போக்குவரத்தை சீர் செய்ய சிக்னலில் போக்குவரத்து காவலர்கள் இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதையடுத்து இதனை கட்டுப்படுத்த போலீசார் பல்வேறு முயற்சி எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்தியாவிலேயே முதல் முறையாக சென்னையில் போக்குவரத்தை கவனிக்க டிராபிக் ரோபோ விரைவில் வலம் வர உள்ளது. இந்த ரோபோ சாலையை மக்கள் கடக்கவும் வாகனங்களை சீர்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளது.

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு காட்சி கூடத்தை காவல் துறை ஆணையர் விஸ்வநாதன் துவக்கி வைத்தார். இதில் குழந்தைகளை கவரும் வகையில் சாலை பாதுகாப்பு விதிகளை புரியும் விதமாகவும் எடுத்துக் கூறும் வகையிலும் ரோபோ இடம் பெற்றிருந்தது.

மேலும் படிக்க