• Download mobile app
29 Mar 2024, FridayEdition - 2970
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இந்தியாவிலேயே முதல்முறையாக அதிநவீன கதிரியக்க சிகிச்சை சேவை கோவையில் துவக்கம்

November 7, 2019 தண்டோரா குழு

இந்தியாவிலேயே முதல்முறையாக அதிநவீன கதிரியக்க சிகிச்சை சேவை கோவையிலுள்ள ஸ்ரீராமகிருஷ்ணா புற்றுநோய் மற்றும் ஆராய்ச்சி மையத்தில் துவக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் ஏழாம் தேதி தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது அதன் ஒரு பகுதியாக கோவையிலுள்ள ஸ்ரீராமகிருஷ்ணா புற்றுநோய் மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் கதிரியக்க சிகிச்சை பற்றிய சிறப்பு விழிப்புணர்வு கையேடு வெளியீடு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் டாக்டர் குகன் கலந்துகொண்டு புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு கையேடு வெளியிட்டு பேசினார்.

அப்போது அவர் பேசுகையில்,

புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு மக்களிடத்தில் அதிக அளவு ஏற்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. மக்கள் அச்சத்தால் தங்களுக்கு புற்று நோய் வந்துவிடுமோ அல்லது புற்று நோய் என்று கருதி அதற்கான சிகிச்சைகளை எடுத்துக் கொள்ளாதது தற்போதுள்ள நடைமுறையில் மக்கள் மூன்றாம் நிலையை எட்டிய பின்னர் தான் அதற்கான சிகிச்சையை மேற்கொள்ள வருகின்றனர். இதனால் நோயின் தாக்கம் அதிகளவில் காணப்படுவதற்கான சிகிச்சை மேற்கொள்ளும்போது பக்கவிளைவுகள் ஏற்படும். புற்றுநோயை கட்டுப்படுத்த இயலாமல் சென்றுவிடும்.எனவே இது குறித்தான விழிப்புணர்வை மக்களிடத்தில் அதிக அளவில் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினத்தில் நாங்கள் அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் புற்றுநோய் விழிப்புணர்வு குறித்த கையேடு ஒன்றை வெளியிட்டுள்ளோம்.

இந்த கையேடு அவனது மொபைல் மூலம் கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து டவுன்லோட் செய்து பயன்படுத்தவும் முடியும். எனவே இதை பயன்படுத்துவது எளிது அனைவரும் இந்த புத்தகம் மூலம் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை பயன்பெறலாம். புற்றுநோய் கட்டிகளை கரைக்க செய்யும் கதிரியக்க சிகிச்சை முறை குறித்து பல்வேறு தரப்பட்ட மக்களின் மனதிலும் பல்வேறு எண்ணங்கள் எழுந்து வருகிறது கதிரியக்க சிகிச்சை என்பது ஒரு எளிய சிகிச்சை முறையாகும். இதனால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது மக்கள் முறையாக இந்த கதிரியக்க சிகிச்சை குறித்து விழிப்புணர்வை தங்களுக்குள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் இந்த சிகிச்சை மூலம் புற்றுநோய் கட்டிகள் விரைவில் எளிதில் கலைக்கப்படலாம் எனவே இந்த சிகிச்சையானது மக்களுக்கு மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்ல பயன்தரும் தற்போது இந்தியாவிலேயே முதன்முறையாக அதிநவீன கதிரியக்க சிகிச்சை இயந்திரம் இன்று முதல் கோவை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு கோவையில் துவக்கி உள்ளோம். இந்த இயந்திரத்தின் மூலம் புற்றுநோய் கட்டிகளை கரைக்கும் நேரம் ஆனது குறைக்கப்படும் 7 நிமிடங்களுக்குள் எத்தகைய புற்றுநோய் கட்டிகளாக இருந்தாலும் இந்த இயந்திரத்தின் மூலம் கதிரியக்க சிகிச்சை முறை மூலம் ஏழு நிமிடங்களுக்குள் கரைத்து விடலாம். இந்த சிகிச்சைக்கான கட்டணம் மிகவும் குறைவாகும். இந்தியாவிலேயே புற்றுநோய் சிகிச்சைக்கு குறைந்த கட்டணம் எங்களுடைய மருத்துவமனையில்தான் வழங்கப்பட்டு வருகின்றது.

தொடர்ந்து அந்த சேவையானது தொடரும் மேலும் தமிழக முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலமும் புற்றுநோய் சிகிச்சைக்கான கட்டணத்தை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். எனவே மக்கள் யாரும் அச்சப்பட வேண்டிய தேவையில்லை.இந்த எந்திரம் மூலம் மேற்கொள்ளப்படும் சிகிச்சைகள் அனைத்தும் வெற்றிகரமாக நடைபெறும் எனவே மக்கள் இந்த கதிரியக்க சிகிச்சை முறையை மேற்கொண்டு பயன்பெறலாம் என்றார்.

மேலும் படிக்க