• Download mobile app
26 Apr 2024, FridayEdition - 2998
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இந்தியாவிலேயே சிறந்த 100 கல்வி நிறுவனங்களில் ஒன்றாக இடம் பிடித்துள்ள இரத்தினம் தொழில்நுட்ப வளாகம்

June 6, 2023 தண்டோரா குழு

2018 ஆம் ஆண்டில் இந்திய அரசின் உயர்கல்வித்துறை ஆரியா(Atal Ranking of Institutions on Innovation Achievements) என்ற ஒரு தரமிடும் முறையை உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு கொண்டுவந்தது. இந்த தரமிடும் முறையானது ஏழு முக்கிய அம்சங்களுடன் மதிப்பிடப்படுகிறது.

இந்த ஏழு அம்சங்கள் ஒரு உயர் கல்வி நிறுவனத்தின் புதிய யோசனைகளையும், அதன் செயலாக்கத்தையும் அளக்கும் மிக முக்கியமான 22 செயல்திறன் அளவீடுகளையும் கொண்டு செயல்படுகிறது . இதன் நான்காவது பதிப்பில் 1417 உயர்நிலை கல்வி நிறுவனங்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தியிருந்தது. அதில் 1077 தொழில்நுட்ப உயர்கல்வி நிறுவனங்களும், 340 பிற உயர்கல்வி நிறுவனங்களும் பங்குபெற்றது. இந்த அரியாவின் நான்காவது பதிப்பானது NIRF -புதுமையைக் கண்டறிதல் என்ற பெயருடன் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த பெயருக்கு தகுந்தாற்போல் அதன் கட்டமைப்பு, அளவுருக்கள் மற்றும் முக்கிய செயல்திறன் காட்டி என ஆரியா அதன் தரத்தை மாற்றிக்கொண்டது. இரத்தினம் தொழில்நுட்ப வளாகம் 2023 ஆம் ஆண்டின் NIRF – புதுமையை கண்டறிதல் என்ற பிரிவின் கீழ் இந்தியாவிலேயே சிறந்த 100 கல்வி நிறுவனங்களில் ஒன்றாக இடம் பிடித்துள்ளது.

(கல்லூரி 51 முதல் 100 வரையிலான வரிசையில் சிறப்பான இடத்தை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது)கடந்த வருடம் இரத்தினம் தொழில்நுட்ப வளாகம் எக்ஸலண்ட் பேண்ட் என்ற சிறப்பான இடத்தைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க