• Download mobile app
25 May 2026, MondayEdition - 3757
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்தியாவின் முதல் குளிர்சாதன ரயில் ஆம்புலன்ஸ் அறிமுகம்

March 11, 2017 தண்டோரா குழு

இந்தியாவின் முதல் குளிர்சாதன ரயில் ஆம்புலன்ஸை ரயில்வே துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக ரயில்வே துறை செய்தி தொடர்பாளர் நரேந்திர பாட்டீல் கூறுகையில்,

“இந்தக் குளிர்சாதன ரயில் ஆம்புலன்ஸ், முன்னாள் பொது மேலாளர் எஸ்.கே. சூட் சிந்தனையால் உருவானது. கடந்த 2014-ம் ஆண்டு . மகாராஷ்டிர மாநிலம் திவா-சவந்த்வாடி இடையே ரயில் தடம் புரண்டு 19 பேர் உயிரிழந்தனர். அதையடுத்து இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த ரயில் ஆம்புலன்ஸ் குறைந்தபட்சம் 50 பேருக்கு அடிப்படை சிகிச்சை வழங்குவதற்கான மருத்துவ வசதிகளைக் கொண்டது” என்றார்.ரயிலின் ஒரு பகுதியாக இருக்கும் இந்த ஆம்புலன்ஸ் அவசர கால சிகிச்சையை அளிக்கும் என்றும் நரேந்திர பாட்டீல் கூறினார்.

மேலும் படிக்க