December 3, 2025
தண்டோரா குழு
நாடு முழுவதும் கிரிக்கெட்டின் மேல் இருக்கும் உற்சாகம் அதிகரித்து வரும் இந்தச் சூழலில் இந்தியாவின் முன்னணி பெயிண்ட் மற்றும் அலங்கார பிராண்டான ஏசியன் பெயிண்ட்ஸ் இந்திய கிரிக்கெட்டுக்கு வண்ணம் சேர்க்கும் விதமாக அதிகாரப்பூர்வமான பங்காளராக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துடனான (பிசிசிஐ) தனது கூட்டாண்மையை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறது.
இந்த மூன்று ஆண்டு சங்கமம் இந்தியாவில் நடைபெறும் அனைத்து ஆண்கள், பெண்கள் மற்றும் உள்நாட்டு தொடர்களிலும் இணைந்து செயல்படும்.இந்த இணைப்பு 110 போட்டிகளுக்கும் மேல் நீடிக்கும்.இந்தச் சங்கமம் ஏசியன் பெயிண்ட்ஸுக்கு கிரிக்கெட்டுடன் இருக்கும் தொடர்பை வலிமைப்படுத்தி கிரிக்கெட்டின் ஒவ்வொரு வண்ணத்தோடும் 1.4 பில்லியன் இதயங்களை ஒன்றிணைக்கிறது.
இந்தக் கூட்டாண்மையைக் குறித்து கருத்து தெரிவித்த ஏசியன் பெயிண்ட்ஸ் லிமிடெடின் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான அமித் சிங்கில் கூறுகையில்:
“ஒரு பில்லியன் இதயங்களை கிரிக்கெட் ஒன்றிணைக்கிறது, மேலும் அந்த உணர்வை உயிர்ப்பிக்கும் ஒரு தளத்தில் பிசிசிஐயுடன் இணைவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். மக்கள் எவ்வாறு வாழ்கிறார்கள், எப்படி உணர்கிறார்கள், தங்களை எவ்விதம் வெளிப்படுத்துகிறார்கள் என்பதை வடிவமைக்க வண்ணத்தின் ஆற்றலை ஏசியன் பெயிண்ட்ஸ் எப்போதும் நம்புகிறது. இந்தச் சங்கமம் அந்த நம்பிக்கையை மேலும் வலிமைப்படுத்துகிறது.
பிசிசிஐயுடனான எங்கள் கூட்டாண்மை உருவாகிவரும் ஓர் அற்புதமான புதிய அத்தியாயத்தைக் குறிக்கிறது. இந்திய நாடு மிகவும் விரும்பும் ஒரு விளையாட்டின் இதயத்திற்குள் வண்ணமயமான ஓர் உலகத்தை நாங்கள் கொண்டு வருகிறோம். அதிகாரப்பூர்வமான வண்ணக் கூட்டாளியாக மாறி இரசிகர்களுடனும் வாடிக்கையாளர்களுடனும் அர்த்தமுள்ள வழிகளில் ஈடுபட்டு, கிரிக்கெட்டின் உற்சாகத்தையும் ஆற்றலையும் கொண்டாடி, விளையாட்டின் ஒவ்வொரு தருணத்திலும் அதிக துடிப்பையும் மகிழ்ச்சியையும் சேர்ப்பதை நாங்கள் எதிர்நோக்குகிறோம்.
வீடுகள் வெறும் இடங்கள் அல்ல என்று ஏசியன் பெயிண்ட்ஸில் இருக்கும் நாங்கள் நம்புகிறோம். அவை 1.4 பில்லியன் கனவுகள் ஒன்றாக இணைந்து உற்சாகப்படுத்தும் ஓர் இடமாகும். கூட்டு ஆர்வத்தில், வண்ணத்தின் உண்மையான நோக்கத்தை நாங்கள் காண்கிறோம்: அதுதான் இணைப்பு. கிரிக்கெட்டுடனான மிகவும் “வண்ணமயமான” தொடர்பாக இதை மாற்றும் பல சுவையான ஒருங்கிணைப்புகள் எங்களிடம் உள்ளன.” பிசிசிஐ-யின் செய்தித் தொடர்பாளரான தேவஜித் சைகியா தொடர்ந்து கூறும்போது, “இந்தியக் கிரிக்கெட்டின் அதிகாரப்பூர்வமான வண்ணக் கூட்டாளியான ஏசியன் பெயிண்ட்ஸை வரவேற்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். மக்களின் வாழ்க்கையில் வண்ணத்தையும் உணர்ச்சியையும் இணைக்கும் ஏசியன் பெயிண்ட்ஸின் பாரம்பரியம் இந்தியக் கிரிக்கெட்டின் உணர்வை முழுமையாக நிறைவு செய்கிறது. ஒன்றாக இணைந்து நாடு முழுவதும் உள்ள இரசிகர்களுக்கு மறக்கமுடியாத அனுபவங்களைக் கொண்டு வருவோம் என்று நாங்கள் எதிர்நோக்குகிறோம்.” என்று கூறினார்.
இந்தியாவின் கிரிக்கெட் ஆர்வத்தைக் கொண்டாடும் விதமாக வடிவமைக்கப்படும் அரங்க அனுபவம் முதற்கொண்டு இரசிகர்களைக் கவரும் விளம்பரங்கள் வரை அனைத்திலும் கள மற்றும் டிஜிட்டல் தொடர் செயல்பாடுகள் மூலம் ஏசியன் பெயிண்ட்ஸின் பங்காண்மை உயிர்த்துடிப்பைக் கொண்டுவரும். “மிகவும் வண்ணமயமான இரசிகர்களைக்” கொண்டாடும் விதமாக முதன் முறையாக நீங்கள் எல்லோரும் “ஏசியன் பெயிண்ட்ஸ் கலர் கேம்” எனப்படும் ஒரு இரசிகர் கேமராவைப் பார்க்கப் போகிறீர்கள். ஒவ்வொரு முறையும் ஒரு வண்ணத் தோற்றமாக இந்த இதுவரை இல்லாத முதல் இரசிகர் கேமரா “கிரிக்கெட்டுக்கு வண்ணம் சேர்த்து” ஏராளமான கவர்ச்சியை உருவாக்கப்போகிறது.
ஏசியன் பெயிண்ட்ஸ் இந்தியாவில் வண்ணத்தின் தலைமைக்கும் வடிவமைப்புப் புதுமைக்கும் ஒத்த பொருள் கொண்டதாக இருந்து வருகிறது. இந்தக் கூட்டாண்மையின் மூலம் கிரிக்கெட் என்னும் விளையாட்டு உருவாக்கும் ஆர்வம், படைப்பாற்றல் மற்றும் ஒற்றுமையை மைதானத்திலும் அதற்கு அப்பாலும் கொண்டாடும் ஒரு பில்லியன் இந்தியர்களுடனான அதன் உணர்ச்சிபூர்வமான தொடர்பை மேலும் வலிமைப்படுத்துவதே இந்த பிராண்டின் நோக்கமாக இருக்கிறது.