• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இணையத்தில் இனி ஆபாச வீடியோ பார்க்க அடையாள அட்டை கட்டாயம் !

April 24, 2019 தண்டோரா குழு

இணையதளத்தில் ஆபாச வீடியோ பார்க்க அடையாள அட்டை கட்டாயம் என புதிய சட்டத்தை பிரிட்டன் அரசு இயற்றியுள்ளது.

உலகம் முழுவதும் இணையதளத்தில் ஆபாச வீடியோக்களை ஏராளமான வெப்சைட்டுகள் வெளியிட்டு வருகிறது. இந்த வெப்சைட்டுகளை பார்க்க பிறந்த தேதி மற்றும் 18 வயதை கடந்தவன் என டிக் மார்க் செய்தாலே போதும். இதனால் யார் வேண்டுமாலும் இதனை பார்க்கலாம் என்ற நிலை தற்போது உருவாகியுள்ளது. பல குற்றங்களுக்கு இது போன்ற ஆபாச வீடியோக்கள் தான் காரணமாக இருப்பதாக கூறி இந்தியாவில் மத்திய அரசு ஆபாச வீடியோக்களை வெளியிடும் இணையதளங்களை பார்க்க முடியாத வண்ணம் தடை செய்துள்ளது.

ஆனாலும், சிலர் அதிகாரப்பூர்வமில்லாத ஆப்களை கொண்டு அந்த வெப்சைட்களை சட்டவிரோதமாக பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், பிரிட்டனில் இது போன்ற ஆபாச வீடியோக்களை வெளியிடும் வெப்சைட்கள் அதை பார்ப்பவர்களின் வயதை உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும், 18 வயதை கடந்தவன் என்பதை உறுதி செய்ய பாஸ்போர்ட், கிரிடிட்கார்டு, டிஜிட்டல் ஐடி ஆகியவற்றை பயன்படுத்தி வயதை உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து, பிரிட்டன் அரசு இந்த சட்டத்தை நடைமுறைபடுத்த வரும் ஜூலை மாதம் 15 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கியுள்ளது. இதனை பின்பற்றாத ஆபாச வீடியோக்களை வெளியிடும் இணையதளங்கள் பிரிட்டனில் முடக்கம் செய்யப்படும் என்றும் பிரிட்டன் மீடியா அமைச்சகம் தெரிவித்துள்ளது.

18 வயதுக்கு குறைவானர்களுக்கு இன்றைய தொழிற்நுட்ப வளர்ச்சி காரணமாக இந்த வெப்சைட்களை எளிதாக அணுகமுடிகிறது இதை அதை தடுக்க இந்த நடவடிக்கையை அந்நாட்டு அரசு எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க