August 20, 2020
தண்டோரா குழு
பாடும் நிலாவே எழுந்து வா .என கோவையில் ஸ்டேட் லெவல் இசைகலைஞர்கள் எஸ்.பி. பாடிய பாடல்களை உருக்கமாக பாடி பிரார்த்தனை செய்தனர்.
தமிழ் ,தெலுங்கு,இந்தி என இந்திய மொழிகளில், பல ஆயிரம் பாடல்கள் பாடி இந்திய சினிமா ரசிகர்களை கவர்ந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உடல்நிலை மோசமாகி சிகிச்சையில் இருக்கிறார் . அவர் தொடர்ந்து ஒரு வாரத்திற்கும் மேலாக ஐசியுவில் இருந்து வருகிறார்.இந்நிலையில் அவர் நலமுடன் மீண்டு வர பாடும் நிலாவே எழுந்து வா என தமிழகத்தில் திரையுலகினர் மற்றும் அவரது ரசிகர்கள் மற்றும் இசைக்கலைஞர்கள் இன்று மாலை ஆறு மணிக்கு கூட்டு பிரார்த்தனையல் ஈடுபட்டனர்.
இதன் ஒரு பகுதியாக ஸ்டேட் லெவல் இசைக்கலைஞர்கள் சார்பாக கோவை ஆவாராம்பாளையம் பகுதியில் ஓட்டல் அரங்கில் சுமார் 20 க்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் இணைந்து அவர் பாடிய பாடல்களை உருக்கமாக பாடி பிரார்த்தனை செய்தனர்.இதில் அவர் பாடிய நலம் வாழ என்னாலும் என் வாழ்த்துக்கள் என்ற பாடலை இசைத்து பாடிய போது அங்கிருந்த அனைவரும் இணைந்து பிரார்த்தனை செய்த்து அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.