• Download mobile app
23 Mar 2026, MondayEdition - 3694
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இங்கிலாந்து இளவரசர் ஹாரிக்கும் ஹாலிவுட் நடிகை மேகனுக்கு மே 18ல் திருமணம்

December 16, 2017 தண்டோரா குழு

இங்கிலாந்து நாட்டின் இளவரசர் ஹாரிக்கும் அவருடைய காதலி மேகனுக்கும் அடுத்த ஆண்டு மே மாதம் 18ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது என்று கென்சிங்டன் அரண்மனை அறிவித்துள்ளது.

இங்கிலாந்து நாட்டின் அரசி எலிசபெத்தின் பேரனும் இளவரசர் சார்லஸ் மறைந்த இங்கிலாந்து இளவரசி டயானாவின் இரண்டாவது மகன் இளவரசர் ஹாரி ஆவார். கடந்த 2௦16 முதல் இளவரசர் ஹாரியும் ஹாலிவுட் நடிகை மேகனும் காதலித்து வந்தனர். இங்கிலாந்து அரச குடும்பத்தினர் இவர்களுடைய காதலுக்கு பச்சை கொடி காட்டினர். கடந்த நவம்பர் மாதத்தில் தொடக்கத்தில் இருவரும் நிச்சயம் செய்துகொண்டனர்.

இதையடுத்து, இவர்களுடைய திருமணம் விரைவில் நடைபெறும் என்று இளவரசர் ஹாரியின் தந்தை இளவரசர் சார்லஸ் சமீபத்தில் அறிவித்திருந்தார். இந்நிலையில், அடுத்த ஆண்டு, மே மாதம் 18ம் தேதி இங்கிலாந்தின் Windsor Castleல் உள்ள St. George Cathedralல் இளவரசர் ஹாரி மேகனின் திருமணம் நடைபெறவுள்ளது என்று கென்சிங்டன் அரண்மனை அறிவித்துள்ளது.

இந்த திருமணத்திற்கு மிக பிரமாண்ட வரவேற்பு, இசை நிகழ்ச்சிகள், மலர்கள் ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இந்த திருமணத்திற்கு உலகிலுள்ள பிரபலங்கள் மற்றும் அரச குடும்பத்தினர் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க