September 5, 2017 
                                இங்கிலாந்து இளவரசர் வில்லியம்ஸ் மற்றும் இளவரசி கேட் தம்பதி, “தங்கள் மூன்றாவது குழந்தையை எதிர்பார்த்திருப்பதாக” டிவிட்டரில் தகவல் தெரிவித்துள்ளனர். 
இங்கிலாந்தின் இளவரசர் வில்லியம்ஸ்க்கு  ஏற்கனவே 4 வயதில் ஜார்ஜ் மற்றும் சார்லட் என்று இரண்டு குழந்தைகள் உள்ளன. 
“இது ஒரு மகிழ்ச்சியான செய்தி. கேம்ப்ரிட்ஜ் இளவரசி மற்றும் இளவரசருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்” என்று இங்கிலாந்து பிரதமர் தனது ட்விட்டரில் வாழ்த்து செய்தி அனுப்பினார். 
இந்நிலையில் இளவரசி கேட் ஹைப்பரேமேசிஸ் கிராவிடாரம்(Hyperemesis Gravidarum) என்னும் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.  
இதன் காரணமாக அவர் விரைவில் குணமாக வேண்டும் என இங்கிலாந்து மக்கள் பிராத்தனையில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.