• Download mobile app
24 Mar 2026, TuesdayEdition - 3695
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இங்கிலாந்தின் இளம் கோடீசுவரர் ஆன இந்திய இளைஞர்

October 17, 2017 தண்டோரா குழு

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர், ஆன்லைன் ரியல் எஸ்டேட் வியாபாரம் மூலம் இங்கிலாந்தின் இளம் கோடீஸ்வரர் ஆகியுள்ளார்.

இங்கிலாந்து தலைநகர் லண்டனை சேர்ந்த இந்திய வம்சாவளியான 19 வயது அக்‌ஷய் ரூபரேலியா,தற்போது இங்கிலாந்தில் கோடீசுவரர்கள் பட்டியலில் ஒருவராக ஆகியுள்ளார். இவர் தனது பள்ளிபடிப்பை படித்திக்கொண்டே ‘ஆன்லைன்’ மூலம் ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்து வருகிறார். இதன் மூலம், ஒரு வருடத்தில் சுமார் 100கோடி மதிப்புள்ள சொத்துக்களை விற்று,சுமார் 120 கோடி ரூபாய் லாபம் பெற்றுள்ளார்.

அவருடைய இணையதளமான ‘doorsteps.co.uk’,16 மாதங்களுக்கு முன்பு தான் வெளியானது.தற்போது, இங்கிலாந்தில் உள்ள பெரிய ரியல் எஸ்டேட் கம்பெனிகள் பட்டியில் 18வது இடத்தில் உள்ளது. தனது உறவினர்களிடம் 6லட்சம் ரூபாயை கடனாக பெற்று,தனது ஆன்லைன் பிசினசை தொடங்கினார்.

பள்ளிக்கூடத்தில் படிக்கும் அவர்,காது கேளாதஅவருடைய தாய் மற்றும் தந்தையை நன்கு கவனித்து கொள்ளும் அளவிற்கு வருமானத்தை சேர்த்துள்ளார்.

மேலும்,பொருளாதாரம் மற்றும் கணக்கு பாடங்களை படிக்க, லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் அக்க்ஷய்க்கு இடம் வழங்க முன் வந்துள்ளது. ஆனால்,தனது வியாபாரத்தை மேலும் வளர்க்க விரும்புவதால், அங்கே சேர்ந்து படிப்பதை குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்று அக்க்ஷய் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க