• Download mobile app
05 Sep 2025, FridayEdition - 3495
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆஸ்திரேலியாவிருந்து 1.49 கோடி மதிப்புள்ள சோழர் காலத்து சிலை மீட்பு

May 26, 2017 தண்டோரா குழு

தஞ்சாவூர் கோவிலில் கொள்ளையடிக்கப்பட்ட ரூ.1.49 கோடி மதிப்புள்ள சிலையை ஆஸ்திரேலியாவில் இருந்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மீட்டு வந்துள்ளனர்.

சுமார் 1046 ஆண்டுகளுக்கு முந்தைய சோழர் காலத்து நரசிம்மசிலையை விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் இருந்து 15 ஆண்டுகளுக்கு முன்பு சிலர் திருடி சென்றுள்ளனர்.

அமெரிக்கா வழியாக ஆஸ்திரேலியாவுக்கு கடத்தப்பட்டரூ.1.49 கோடி மதிப்புள்ள இந்த சிலையை ஐ.ஜி.,பொன்.மாணிக்கவேல் தலைமையிலான குழுவினர் ஆஸ்திரேலியா சென்று மீட்டனர்.

இதுக்குறித்து பொருளாதார குற்றப்பிரிவு ஏ.டி.ஜி.பி., பிரதீப் பிலிப் கூறும்போது,

உலக சந்தையில் ஆயுதம் மற்றும் போதை பொருளுக்கு அடுத்ததாக கலை நுட்ப சிலைகளுக்கு அதிக மதிப்பு இருப்பதால் சிலை கடத்தல் தொடர்கிறது. இவற்றை தடுக்க தமிழக கோவில் சிலைகளை ஆவணப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சோழர் கால சிலைகள் அதிகளவில் கடத்தப்படுகின்றன.இந்தியாவிற்கு பழமையான வரலாறு உண்டு. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் வரலாறுக்கு மதிப்பு அதிகம். இங்கு மக்களுக்கு பழமையான சிலை மதிப்பு தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும், இந்த வழக்கிற்கும் சுபாஷ் கபூருக்கும் தொடர்பு கிடையாது. இந்த சிலையை கடத்தியது மும்பையை சேர்ந்த வல்லப பிரகாஷ் என்பவர். இவர் 2 நாளுக்கு முன் தான் விடுதலையானார். சிலை கடத்தல் வழக்கில் யாருக்கும் குண்டர் சட்டம் விதிக்கப்படவில்லை என ஐ.ஜி., பொன்மாணிக்கவேல் கூறினார்.

மேலும் படிக்க