• Download mobile app
18 Jan 2026, SundayEdition - 3630
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆஸ்கார் மட்டும்தான் வாங்குவாரா? கொதித்தெழுந்த கங்கை அமரன்.

May 6, 2016 தண்டோரா குழு

இந்திய சினிமாவின் மிக உயரிய விருது என்றால் அது தான் தேசிய விருது. இந்தியா சினிமாவின் 63வது தேசிய விருதுகள் சமீபத்தில் வழங்கப்பட்டது.

தாரைத் தப்பட்டை படத்திற்குப் பின்னணி இசைக்காக இளையராஜாவுக்கு வழங்கப்பட்ட விருதை ஏற்காமல் அவர் இந்த விழாவைப் புறக்கணித்தார். பாடல், பின்னணி இசை என இரண்டு விருதுகள் கொடுக்கப்படுவது அவருக்குப் பிடிக்கவில்லையாம்.

இது பற்றி தேசிய விருது குழுவில் இந்த விருதுக்குப் பரிந்துரை செய்த இவரது தம்பி இயக்குநர் கங்கை அமரனிடம் கேட்டபோது, இந்தச் செயல் முற்றிலும் தவறானதாகும். பிடிக்கவில்லை என்று முதலிலேயே கூறியிருந்தால் வேறு ஒரு இசையமைப்பாளருக்காவது இந்த விருது கிடைத்திருக்கும். இப்படி திமிராக நடந்து கொள்வது பற்றிப் பல ரசிகர்கள் என்னிடம் மனசு வருந்திக் கேட்கும் போது கோபம் வருகிறது.

இப்படி விருதை ஏற்காமல் அவமானப்படுத்துவது கலைஞனுக்கு அழகல்ல. தாரைத் தப்பட்டை படத்தில் இடம் பெற்ற வதன வதன பாடல் ஜிங்கிடி ஜிங்கிடி உனக்கு என்ற பழைய பாடலின் காப்பி. பிறகு எப்படிப் பாடலுக்கு விருது கொடுக்க முடியும். ஆஸ்கார் விருது கொடுத்தால் தான் வாங்குவாரா என்று கொந்தளித்து பேசியுள்ளார்.

மேலும் படிக்க