• Download mobile app
07 Feb 2026, SaturdayEdition - 3650
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆளுநருடன் டிடிவி தினகரன், ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் சந்திக்கிறார்

September 7, 2017 தண்டோரா குழு

அதிமுக அம்மா அணியின் துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், இன்று தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்திக்கிறார்.

கடந்த சில தினங்களுக்கு முன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கொடுத்த ஆதரவை திரும்ப பெறுவதாக தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் ஆளுநரிடம் தனித்தனியாக கடிதம் அளித்தனர்.இந்நிலையில் டிடிவி தினகரன் தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் ஆளுநர் வித்யாசாகர் ராவை இன்று சந்திக்கிறார்.

இந்த சந்திப்பின்போது, டிடிவி தினகரன் முதல்வரை மாற்ற வேண்டும், பெரும்பான்மையை நிரூபிக்கக் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நீக்கக்கோரும் தங்களின் போராட்டத்திற்கு இன்று நல்ல முடிவு கிடைக்கும் என தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க