January 11, 2026
தண்டோரா குழு
கோவை அவிநாசி சாலையில் அமைந்துள்ள ஆர்.கே ஸ்ரீ ரங்கம்மாள் கல்வி நிலையம் மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை காலை பொங்கல் விழாவும் தொடர்ந்து Young preneur 2026 இளம் மாணவத் தொழில் முனைவோர் 2026 நிகழ்வு நடைபெற்றது.
நிகழ்வில் கோவை மாவட்டத் துணை கமிஷனர் திவ்யா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கிச் சிறப்புரையாற்றினார்.
மாணவர்களுக்கு நேரடியாக தொழில் துறை அனுபவத்தை வழங்கும் வகையில் நடைபெற்ற இதில் ஆறாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் தங்களது சொந்த முயற்சியில் சுமார் 25 க்கும் மேற்பட்ட அரங்குகளில் தங்களது பொருட்களை காட்சி படுத்தி விற்பனை செய்தனர்.இதில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான துணி வகைகள், பேன்சி பொருட்கள், உணவு அரங்குகள்,என பல்வேறு அரங்குகளை அமைத்த மாணவர்களிடம் பெற்றோர்கள் மற்றும் பள்ளியில் பயிலும் மாணவர்கள், ஆசிரியர்கள்,பொதுமக்கள் என பலரும் பொருட்களை ஆவலுடன் வாங்கி சென்றனர்.
நிகழ்வில் இந்நாள் மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் பெற்றோர்கள் அனைத்து ஆசிரிய பெருமக்கள் என அனைவரும் 3000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மாணவர்களின் அரங்குகளை பார்வையிட்டு அவர்களின் இளம் தொழிலை ஊக்கப்படுத்தி மகிழ்ந்ததுடன் விழாவையும் சிறப்பித்தனர்.
ஆர்.கே.எஸ் கல்வி நிறுவனம் சார்பாக மாணவர்களை அடுத்த தலைமுறை தொழில் முனைவோர்களாக மாற்றும் புதிய முயற்சியாக நடைபெற்ற இந்நிகழ்ச்சி அனைவரின் பாராட்டுதலையும் பெற்றுள்ளது குறிப்பிடதக்கது.