November 7, 2017
தண்டோரா குழு
வெங்கட் பிரபுவின் பிளாக் டிக்கெட் நிறுவனம் தயாரித்துள்ள ஆர்.கே.நகர் படத்தின் டீஸர் அண்மையில் வெளியானது.
அதில் “நடிகன்னா உனக்கு ஓட்டு போட்டுடுவாங்களா? நீ என்ன எம்.ஜி.ஆரா?” என்ற வசனம் இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து,இந்த வசனம் மறைமுகமாக நடிகர் கமல்ஹாசனை பெயர் குறிப்பிடாமல் அவரை கலாய்க்கும் விதத்தில் இருப்பதாக பலரும் கூறி வருகின்றனர்.
இதற்கிடையில், இதுபற்றி கயல் பட நடிகர் சந்திரன் ட்விட்டரில் வெங்கட் பிரபுவிடம் வாக்குவாதத்தில் இறங்கினார். “உங்களிடம் இருந்து இதை எதிர்பார்க்கவில்லை” என தெரிவித்த அவர், கமல்ஹாசனுக்கு வெங்கட் பிரபு பிறந்தநாள் வாழ்த்து சொன்னதையும் விமர்சித்துள்ளார். மேலும், “ஒரு பக்கம் RK நகர் டீஸர், அதை சரிக்கட்ட பிறந்தநாள் வாழ்த்தா?” எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.