• Download mobile app
21 May 2025, WednesdayEdition - 3388
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஆர்.எஸ்.புரம் திவான் பகதூர் சாலையில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

September 2, 2020 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் ஆர்.எஸ்.புரம் திவான் பகதூர் சாலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மாதிரி சாலை அமைக்கும் பணிகள் நடைபெறுவதை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் குமாரவேல் பாண்டியன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் ஆர்.எஸ்.புரம் திவான் பகதூர் சாலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.24.36 கோடி மதிப்பீட்டில் சுக்ரவார்பேட்டை ரோடு சந்திப்பு முதல் கௌலிபிரவுன் ரோடு வரை மாதிரி சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.இந்நிலையில்,இப்பணிகளை இன்று மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் குமாரவேல் பாண்டியன் பார்வையிட்டு விரைந்து முடிக்குமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

மேலும்,மின்சார புதைவிடம், கேபிள்கள், 24/7 குடிநீர் குழாய் பதிக்கும் பணி,தொலைத் தொடர்பு கேபிள் அமைத்தல், மழைநீர் வடிகால் அமைத்தல், பாதசாரிகள் நடைபாதை, அலங்கார தெருவிளக்குகள் அமைக்கும் பணி, ஒளிரும் விளம்பர பலகைகள் அமைக்கும் பணி ஆகிய பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் குமாரவேல் பாண்டியன் இப்பணிகளை விரைந்து முடிக்குமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

அதனைத் தொடர்ந்து திவான்பகதூர் சாலையில் ரூ.41.33 கோடி மதிப்பீட்டில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதற்காக 373 கார்கள் நிறுத்துவதற்காக கட்டப்பட்டுவரும் மல்டிலெவல் கார்பார்க்கிங் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் இப்பணிகளை விரைந்து முடிக்குமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். முன்னதாக ஒப்பணக்கார வீதி மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சமூக இடைவெளியுடன் மாணவிகள் சேர்க்கை நடைபெற்று வருவதை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் குமாரவேல் பாண்டியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இவ்வாய்வின்போது மாநகராட்சி துணை ஆணையாளர் மதுராந்தகி, செயற்பொறியாளர்கள் ஸ்மார்ட் சிட்டி திட்டம் சரவணக்குமார்,வைதீஸ்வரன்(மின்வாரியம்), உதவி செயற்பொறியாளர் சுகந்தி, பால்ராஜ்(மின்வாரியம்) உதவி பொறியாளர்கள் கமலக்கண்ணன், சத்தியமூர்த்தி, குடிநீர் பிரிவு இளம்பொறியாளர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

மேலும் படிக்க