• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆராய்ச்சியில் உலகளவில் சாதனை மேல் சாதனை படைக்கும் சீனா ஆராய்ச்சி மையம்

January 17, 2019 தண்டோரா குழு

நிலவில் தூவப்பட்ட பருத்தி விதைகள் முளைவிட்டுள்ள காட்சிகளை சீனாவின் சாங்-இ விண்கலம் படம் பிடித்து அனுப்பியுள்ளது.

நிலவின் மறுபக்கத்தை ஆராய சாங்-இ என்ற விண்கலத்தை ஜனவரி 3ம் தேதி சீனா அனுப்பியது. இந்த விண்கலம் டிசம்பர் 2ஆம் தேதி நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழைந்தது. இதையடுத்து தனக்குரிய சுற்றுவட்டப் பாதையை நிலை நிறுத்தப்பட்டது. நிலவின் இருண்ட பகுதியில் முதல்முறையாக தரையிறங்க திட்டமிட்டிருந்தது. நிலவும் பூமியும் ஒரே சுற்று வட்டப்பாதையில் பயணிப்பதால் நிலவின் மறுபக்கம் இதுவரையில் காணப்படாத இருண்ட பகுதியாக இருந்தது. இதுவரையில் நிலவின் மறுபக்கத்தை பார்க்க முடிந்ததே தவிர யாரும் அங்கு சென்று அடைந்ததில்லை இந்த வரலாறை மாற்றி எழுதி உள்ளது சீனா. இதனுடன் உயிரியல் தொடர்பான ஆய்வு மேற்கொள்வதற்காக சோதனை முயற்சியாக பருத்தி, உருளைகிழங்கு மற்றும் சில பழங்களின் விதைகளும் அனுப்பிவைக்கப்பட்டன.

நிலவில் விதைகளை சாங்-இ விண்கலம் தூவிய நிலையில் பருத்தி விதைகள் முளைவிட்டு வளர்ந்து வருவது தற்போது தெரியவந்துள்ளது. அதை சாங்-இ விண்கலம் படம்பிடித்து அனுப்பியுள்ளது. இதன் மூலம் நிலவில் தாவரங்கள் வளர்வதற்கான சூழல் இருப்பது நிரூபணமாகியிருப்பதாக சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். குறைந்த புவி ஈர்ப்பு விசை, அதிக கதிர்வீச்சு, வெப்பம் மற்றும் குளிர் நிலவி வரும் நிலவில், தாவரங்கள் மற்றும் விலங்குகள் வாழ்வதற்கான சூழல் மிகவும் கடினம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் நிலவில் மனிதர்கள் குடியேறுவதற்கான திட்டத்திற்கான வாய்ப்புகள் இதன் மூலம் அதிகரித்துள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். சீனாவின் இந்த சாதனை முயற்சி பெரிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க