October 20, 2020
தண்டோரா குழு
பெண்களை முன்னணிக்கு கொண்டுவருவதன் மூலம் அவர்களை வலிமைப்படுத்துவதில் உறுதிகொண்டும், நாட்டில் கிக் பொருளாதார சூழலமைப்பை வலிமைப்படுத்துவதை நோக்கிய பெரும் முன்னேற்றத்தின் ஒருபகுதியாகவும், நாட்டின் முன்னணி எஃப்எம்சிஜி நேரடி விற்பனை நிறுவனங்களில் ஒன்றான ஆம்வே இந்தியா, ‘நாரி சக்தி’ திட்டத்தை அறிவித்துள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த ஆம்வே இந்தியாவின் சிஇஓ அன்ஷு புத்ராஜா,.
கிழக்குப் பிராந்தியத்தில் தொடங்கும் நாரி சக்தி திட்டம் ஏற்கெனவே இருக்கும் பெண் நேரடி விற்பனையாளர்களின் திறன்களை மேம்படுத்தி தங்களது வணிகத்தை சுதந்திரமாக நடத்த முன்னணிக்கு கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. எங்கள் நேரடி விற்பனையாளர்களில் 60% க்கும் அதிகமானவர்கள் பெண்கள் என்பது எங்கள் உறுதிப்பாட்டிற்கு ஒருசான்றாகும். இன்னும் பல பெண்களிடையே தொழில்முனையும் உணர்வை ஊட்டும் வகையில் அமையும் நாரி சக்தி திட்டத்தை தொடங்குவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
திட்டத்தை தொடங்கி வைக்க சில அளவு கோல்களின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் தொழில்முனைவோரை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம், தேர்வு பெற்ற இந்த பெண் தொழில் முனைவோரின் திறமை, சிறந்த வணிக நடைமுறைகள் பற்றிய அறிவு, தயாரிப்பு பயிற்சிகள் மற்றும் பல்வேறு வணிககருவிகள் மற்றும் சமூகவர்த்தகத்தின் பயன்பாடு ஆகியவற்றை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டு பல்வேறு அமர்வுகளை ஆம்வே திட்டமிட்டுள்ளது.
பல்வேறு தொழில்களில் பெண்களின் பங்களிப்பை வளர்ப்பது என்ற தலைப்பில் குழு விவாதத்துடன் இந்ததிட்டம் தொடங்கப்பட்டது. தற்போதைய சூழ்நிலைகாரணமாக கிக் பொருளாதாரத்தின் எழுச்சி மற்றும் நாட்டில் பெண் தொழில்முனைவோரின் எதிர்காலத்தை வலுப்படுத்துவது குறித்து இக்குழுகவனம் செலுத்தியது. இந்தியாவின் கிழக்கு பகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்ட பெண் நேரடி விற்பனையாளர்களை கொண்டு நாரிசக்தி திட்டத்தை தொடங்கிய ஆம்வே, அவர்களை வலிமைப்படுத்தி பயிற்சி அளிப்பதோடு இந்ததிட்டத்தை வரும் மாதங்களில் அதிகமான பெண் நேரடி விற்பனையாளர்களுக்கு விரிவுபடுத்தஎண்ணம் கொண்டுள்ளது.