• Download mobile app
07 May 2025, WednesdayEdition - 3374
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஆபாச வீடியோ சர்ச்சை – தமிழ்நாடு பாஜக பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்த கே.டி.ராகவன் !

August 24, 2021 தண்டோரா குழு

தமிழ்நாடு பாஜக பொதுச் செயலாளர் கே.டி.ராகவன் பாலியல் தொடர்பான சர்சையில் சிக்கியுள்ளார். வீடியோ காலில் பெண் ஒருவருடன் அரை நிர்வாணத்துடன் கலந்துரையாடும் கே.டி.ராகவன், எதிர் திசையில் பேசும் பெண்ணிடம் சில ஆபாச சமிக்ஞை காட்டுகிறார். இறுதியில் அவரே முழு நிர்வாணமாகி, கொச்சையான செயலில் ஈடுபடுவது போன்ற காட்சியும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தனது பதவியை ராஜினாமா செய்து கே.டி.ராகவன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார் . தனது முகநூல் பக்கத்தில் அது தொடர்பான அறிவிப்பை அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

தமிழக மக்களுக்கும் கட்சியினருக்கும் நான் யாரென்று தெரியும்…எனனை சார்தவர்களுக்கும் நான் யார் என்று தெரியும்…நான்30 வருடமாக எந்த ஓரு பிரதி பலனும் இன்றி பணியாற்றி வருகிறேன்..இன்று காலை சமூக வலைத்தளங்களில் என்னை பற்றி ஒரு வீடியோ வெளி வந்ததை அறிந்தேன் …என்னையும் என்கட்சியையும் களங்கபடுத்த இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது …
இன்று மரியாதைக்குரிய மாநிலத்தலைவர் திரு.அண்ணாமலை அவர்களை சந்தித்து ஆலோசனை செய்தேன்… நான் என்னுடைய கட்சி பொறுப்பை ராஜினாமா செய்கிறேன்..குற்றச்சாட்டுகளை மறுக்கிறேன்…சட்ட படி சந்திப்பேன் ..தர்மம் வெல்லும்.
இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க