• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆன்லைன் வர்த்தகத்தை எதிர்த்து கோவையில் வணிகர்கள் ஆர்ப்பாட்டம்

December 17, 2019

ஆன்லைன் வர்த்தகத்தை எதிர்த்து கோவையில் வணிகர்கள் சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 300 க்கும் மேற்பட்ட வணிகர்கள் கலந்து கொண்டனர்.

ஆன்லைன் வர்த்தகத்தை கண்டித்தும் உடனடியாக அதனை தடை செய்ய மத்திர அரசை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு தாலூகா அலுவலகம் முன்பாக மண்டல தலைவர் சூலூர் சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்ற இதில் மாவட்ட தலைவர் இருதயராஜா முன்னிலை வகித்தார்.

இதில் செய்தியாளர்களிடம் பேசிய சூலூர் சந்திரசேகரன்,

ஆன்லைன் வர்த்தகத்தால் இந்திய அளவில் ஒட்டு மொத்த வணிகமும் பாதிக்கப்பட்டு வியாபாரம் சீர்குலைந்து வருகிறது. ஆன்லைன் வர்த்தகத்தால் தற்போது 37 சதவீதம் வரை சிறுவணிகம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் வர்த்தகத்தால் வணிகர்கள் மட்டுமே பாதிக்கப்படுகின்றனர் என நினைக்கக்கூடாது. ஆன்லைன் வர்த்தகத்தால் வணிகம் முடங்கி ஒட்டு மொத்தமாக வணிகம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக அவர் தெரிவித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் சௌந்தர்ராஜன்,கணேசன், வேலுமயில் உட்பட பல்வேறு மகுதிகளை சேர்ந்த வணிகர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க