• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆன்லைனில் மொபைல் போன் விற்பனைக்கு தடைவிதிக்க செல்போன் விற்பனையாளர் சங்கம் கோரிக்கை

December 28, 2018 தண்டோரா குழு

கோவையில் ஆன்லைனில் மொபைல் போன் விற்பனை செய்வதை தடை செய்ய வேண்டும் என்று அரசுக்கு செல்போன் விற்பனையாளர் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

கோவை மாவட்ட செல்போன் விற்பனையாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு கூட்டம் காந்திபுரத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் நடந்தது. இந்த கூட்டத்தில் அனைத்து உறுப்பினர்களும் அடையாள அட்டை வழங்கப்பட்டது. மேலும், கோவை மாவட்டத்தில் ஜிஎஸ்டி வரி க்குப்பின் வியாபாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே செல்போனுக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்றும் ஆன்லைன் வர்த்தகத்தின் மூலம் வியாபாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது இதற்கு தமிழக அரசு உடனடியாக தலையிட்டு ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இந்த கூட்டத்தில் கோவை மாவட்ட தலைவர் மன்சூர்,செயலாளர் பூபதி ராஜா மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் என 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க