October 5, 2017
தண்டோரா குழு
ஆன்லைனில் இனி 12 ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ரயில் பயணத்தின் போது பயனாளிகள் முன்னதாகவே ஆன்லைனில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது வழக்கம். ஆன்லைனில் முன்பதிவு செய்யும் ரயில் டிக்கெட்டுகள் எண்ணிக்கை 6 ஆக இருந்தது. எனினும் சில குடும்பத்தில் உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் பயனாளிகள் பெரிதும் சிரமப்பட்டனர்.
இந்நிலையில், இனி ஆன்லைனில் ஒரே நேரத்தில் 12 ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும், ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய ஆதார் மற்றும் மொபைல் எண்களை இணைக்க வேண்டும் என்றும் ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.