• Download mobile app
05 May 2024, SundayEdition - 3007
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஆந்திராவில் 13 வயது சிறுவனுக்கு இப்படி ஒரு திருமணமா !

May 12, 2018 தண்டோரா குழு

ஆந்திராவில் 13 வயது சிறுவனுக்கும் 23 வயது பெண்ணுக்கும் நடந்த திருமணம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கர்நாடக மாநிலம், சனிக்கனூர் கிராமத்தை சேர்ந்த ஐய்யம்மா என்கின்ற 23 வயது இளம்பெண்ணுக்கும் ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டம்,கவுதாளம் மண்டலம், உப்பரஹால் கிராமத்தை சேர்ந்த 13 வயது சிறுவனுக்கும் கடந்த மாதம் 27ம் தேதி திருமணம் நடைபெற்றது. அந்த சிறுவனின் தாயின் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவர் இறந்த பிறகு அவரது குடுமம்பத்தை பார்த்து கொள்வதற்காக அவரது மூத்த பையனை 23 வயது இளம்பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்.

இதனை அறிந்த சமூக ஆர்வலர்கள் 13 வயது சிறுவன் மைனர் என்பது தெரிந்தும் 23 வயது இளம்பெண்னுடன் எப்படி திருமணம் செய்து வைத்தார்கள். இந்த மைனர் சிறுவனுக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோர்களை கைது செய்ய வேண்டும் என கண்டனம் எழுப்பினர்.
ஆனால், அப்பெண்ணிற்கு 30 வயதிற்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது. இதையடுத்து, காவல் துறையினர் அந்த சிறுவனின் வீட்டிற்கு சென்று பார்த்தனர் அப்போது, அந்த சிறுவனின் குடும்பமும் அந்த பெண்ணின் குடும்பமும் தலைமறைவாக உள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், சிறுவனின் திருமணம் தொடர்பான புகைபடம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் படிக்க