“ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
ஆந்திராவில் கார் தீ விபத்தில் உயிருடன் எறிந்த பெண்
April 20, 2017தண்டோரா குழு
ஆந்திராவில் காரில் விபத்து ஏற்பட்டு தீப்பிடித்ததில், காருக்குள் இருந்த பெண் ஒருவர் தீயில் கருகி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திராவைச் சேர்ந்த நாகமணி மற்றும் ரமணா தம்பதியினர் புருஷோட்டபுரம் என்ற தங்களது சொந்த ஊருக்கு சென்று விட்டு, காரில் விஜயவாடா திரும்பிக் கொண்டிருந்தனர். அதிகாலை விசாகப்பட்டினம் அருகிலுள்ள ராயவரம் மண்டல் என்ற பகுதியில் வந்து கொண்டிருக்கும் போது, கார் திடீரென தீப்பிடித்து கார் மளமளவென எரியத் துவங்கியது.
காரின் கதவுகள் வெளிப்புறமாக பூட்டிக் கொண்டதால், இருவராலும் தப்பித்து வெளியே வர முடியாமல் போனது. இதையடுத்து, கார் தீப்பற்றி எரிவதை பார்த்த அருகிலிருந்தவர்கள், நாகமணியின் கணவர் ரமணாவை காரிலிருந்து வெளியே இழுத்து காப்பற்றினர். ஆனால், நாகமணியை காப்பாற்றுவதற்கு முன்னர், கார் முழுவதும் தீ பரவியிருந்தது. இதனால் காருக்குள் இருந்த நாகமணி தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தை அப்பகுதியில் இருந்த ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இதனைத்தொடர்ந்து, காரில் பற்றிய தீயை முழுவதுமாக அணைத்த தீயணைப்பு துறையினர் நாகமணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையில், காரில் தீப்பற்றியவுடன் உதவி கோரி உறவினர்களுக்கு நாகமணியின் கணவர் போன் செய்துள்ளாரே தவிர, போலீசிற்கோ ஆம்புலன்சுக்கோ தொடர்பு கொள்ளவில்லை. எனவே இந்த விபத்தில் ரமணா மீது காவல்துறையினருக்கு சந்தேகம் வலுத்துள்ளது. இதையடுத்து போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.