• Download mobile app
12 Feb 2026, ThursdayEdition - 3655
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆத்துபாலத்தில் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் 30 லட்சம் மதிப்பிலான கோணிப்பைகள் எரிந்து நாசம் !

December 12, 2021 தண்டோரா குழு

கோவையில் கூடியிருந்த கோணிப்பை குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் 30 லட்சம் மதிப்பிலான கோணிப்பைகள் எரிந்து நாசமாகின.

கோவை ஆத்துப்பாலம் பகுதியில் குனியமுத்தூரைச் சேர்ந்த சிவக்குமார் குறிச்சி பிரிவைச்சேர்ந்த ஹக்கீம் ஆகியோர் கோணிப்பை வியாபாரம் செய்து வருகின்றனர். விடுமுறை நாளான இன்று மாலை திடீரென குடோனில் இருந்து புகை வருவதாக அக்கம்பக்கத்தினர் தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்தனர்.

மேலும் குடோன் உரிமையாளர்களுக்கு தகவலளித்தன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சிவக்குமார் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.ஆனால் அதற்குள் தீ மளமளபரவியிது.தகவலறிந்து இரண்டு வாகனங்களில் வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த தீவிபத்தில் சுமார் முப்பது லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானதாக உரிமையாளர் தெரிவத்துள்ளார்.தகவலறிந்து வந்த குனியமுத்தூர் போலீசார் பூட்டியிருந்த குடோனில் தீ விபத்து ஏற்பட்டது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்

மேலும் படிக்க