• Download mobile app
11 Feb 2026, WednesdayEdition - 3654
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆதியோகியை தரிசித்த ஆதரவற்ற முதியோர்கள்!

September 27, 2021 தண்டோரா குழு

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு கோவையில் உள்ள ஆதரவற்ற முதியோர்கள் ஆதியோகி இன்று கண்குளிர தரிசித்து இன்புற்றனர்.

தமிழ்நாடு சுற்றுலா துறை சார்பில் உலக சுற்றுலா தினத்தன்று பல்வேறு நிகழ்ச்சிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இந்தாண்டு கோவை அரசு ஆதரவற்ற முதியோர் இல்லங்களில் வசிக்கும் சுமார் 60 பேர் ஒரு நாள் இன்ப சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர்.

சுற்றுலாவின் ஒரு பகுதியாக, கோவையின் முக்கிய ஆன்மீக தலங்களில் ஒன்றாக விளங்கும் ஈஷாவிற்கு அவர்கள் வருகை தந்தனர். சாரல் மழையுடன் கூட ரம்மியமான காலை பொழுதில் ஆதியோகியை கண்குளிர தரிசித்து மகிழ்ந்தனர். பின்னர்,தியானலிங்கம் மற்றும் லிங்க பைரவியையும் தரிசனம் செய்தனர்.

இந்த சுற்றுலாவை கோவை மாவட்ட சுற்றுலா துறையும், ஸ்கால் கிளப்பும் (SKAL Club) இணைந்து ஏற்பாடு செய்தன.

மேலும் படிக்க