• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆதரவின்றி தவிக்கும் காந்தியின் பேரன்

May 16, 2016 தண்டோரா குழு.

இந்தியாவிற்குச் சுதந்திரம் வாங்கி கொடுத்ததில் முக்கிய பங்கு வகித்தவர் மகாத்மா காந்தி. இதனாலேயே எல்லோராலும் தேசத் தந்தை என்று அழைக்கப்பட்டார். ஆனால், இந்தியாவிற்குச் சுதந்திரம் வாங்கிக் கொடுத்தவரின் பேரன் தற்போது டெல்லியில் ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ளார் என்பது வேதனையான விஷயம்.
மகாத்மா காந்தியின் 3வது மகன் ராம்தாஸ் காந்தி. இவரது 3 மகன்களில் ஒருவர் கனுபாய்காந்தி. தற்போது 87 வயதுள்ள இவர் அமெரிக்கா நாசாவில், விஞ்ஞானியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இந்த நிலையில் தனது கடைசிக் காலத்தை உறவினருடன் கழிப்பதற்காக தன் மனைவியுடன் கடந்த 2014ம் ஆண்டு இந்தியா வந்துள்ளார்.

ஆனால், உறவினர்களின் ஆதரவு இல்லாததாலும் அவர்களுக்குச் சொந்த வீடு இல்லாததாலும், குஜராத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்தில் இருந்து. இம்மாதம் 8ம் தேதி, டெல்லியில் உள்ள குரு விஷ்ராம்வரித் ஆஷ்ரம் எனும் ஆதரவற்றோர் இல்லத்திற்கு வந்து அவர்கள் தங்கியுள்ளனர்.

இந்நிலையில், கணுபாய் காந்திக்கு உடல்நிலை சரியில்லாததை அடுத்து அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதையடுத்து அவரை நேரில் சந்தித்த டெல்லி மாநில அமைச்சர் சந்தீப் குமார் அவருக்குத் தேவைப்படும் உதவியை அளிக்க தங்கள் அரசு தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். அப்போது, உதவித் தேவைப்படுவதாக இருந்தால் தெரிவிப்பதாக அவரிடம் கணுபாய் காந்தி கூறியுள்ளார்.

இந்நிலையில் இது குறித்து தகவல் கேள்விப்பட்ட பிரதமர் மோடியும் அவருடன் தொலைப்பேசியில் உரையாடி உடல் நலம் விசாரித்ததோடு, தேவையான உதவிகளைச் செய்வதாக உறுதியளித்துள்ளார். தேசத்திற்காக உழைத்த ஒரு தலைவரின் வாரிசு ஆதரவின்றி தவிப்பதாக வெளியான செய்தி பல்வேறு தரப்பினரிடம் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க