October 31, 2017
தண்டோரா குழு
சவூதி அரேபியாவில் 3 ஆண் நண்பர்களுடன் நடனம் ஆடியதற்காக 6 பள்ளி மாணவிகளின் தலை துண்டிக்கப்படும்அந்த நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
சவூதி அரேபியாவியாவை சேர்ந்த ஃபாத்திமா அல் குவைனி என்ற பள்ளி மாணவி, தனது பிறந்த நாளை, அவருடைய நண்பரின் வீட்டில் கொண்டாட முடிவு செய்தார். இதையடுத்து, அவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து, தனது பிறந்தநாள் விழாவை கொண்டாடினர்.
பிறந்த நாள் கொண்டாட்டம் நடந்த இடத்திற்கு அருகில் மசூதி ஒன்று இருந்தது. அந்த மசூதியின் இமாம், அந்த பிறந்த நாள் கொண்டாட்டம் குறித்து காவல்துறைக்கு தகவல் தந்துள்ளார். தகவல் அறிந்த அவர்கள், சம்பவ இடத்திற்கு வந்தபோது, பெண்கள் தங்கள் ஆண் நண்பர்களுடன் நடனம் ஆடி கொண்டிருப்பதை கண்ட அவர்கள், 6 பள்ளி மாணவிகளை கைது செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளும் முன், கைது செய்யப்பட்ட 6 பள்ளி மாணவிகள் ஒரு வருடத்திற்கு மேலாக சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால்,அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றங்களை ஒப்புக் கொள்ளவில்லை.”ஆண்கள் மட்டுமே” கொண்ட ஷரியா குழுவினர் அவர்களுக்கு மரணதண்டனை அளித்து தீர்பளித்தனர்.
சவூதி அரேபியாவில் வழங்கப்படும் கடுமையான தண்டனைகளுக்கு எதிராக சர்வதேச நாடுகளிலிருக்கும் மனித உரிமைகள் ஆர்வலர்கள் போராடியும், ஐ.நாவோ அல்லது ஐரோப்பிய ஒன்றியமோ எந்தவொரு குறிப்பிடத்தக்க மேம்பாட்டை,சவூதி அரேபியாவுக்கு எதிராக கொண்டு வரவில்லை.