• Download mobile app
21 Sep 2026, MondayEdition - 3876
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆணவப்படுகொலைகளை தடுத்து நிறுத்த தனிச்சட்டம் இயற்ற வலியுறுத்தி தமிழ்புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

July 9, 2019

தமிழகத்தில் அதிகரித்து வரும் ஆணவப்படுகொலைகளை தடுத்து நிறுத்தகோரியும்,ஆணவப்படுகொலைகளை தடுத்து நிறுத்த தனிச்சட்டம் இயற்ற வலியுறுத்தியும் தமிழ்புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் கடந்த மாதங்களாக ஆணவப்படுகொலை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இதுபோன்ற ஆணவப்படுகொலைகளை தடுத்து நிறுத்தக்கோரியும்,ஆணவப்படுக்கொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்றக்கோரியும் தமிழ்புலிகள் கட்சியினர் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இக்கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தந்தைபெரியார் திராவிடகழகம், விடுதலைசிறுத்தைகள் கட்சி,புரட்சிகர மாணவர் முன்னணி,தமிழர் திராவிட கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் பங்கேற்றன.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடந்த ஆவணப்படுகொலைக்கு உரிய விசாரணை நடத்தக்கோரியும், கோவை மேட்டுப்பாளையத்தில் நடந்த ஆணவப்படுகொலை சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யகோரி வலியுறுத்தப்பட்டது.இந்த ஆர்ப்பாட்டத்தின் போது மாநில,மத்திய அரசுகளுக்கு எதிராக பல்வேறு முழங்கங்களை எழுப்பினர்.

மேலும் படிக்க