• Download mobile app
03 Dec 2025, WednesdayEdition - 3584
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆடு மேய்க்கும் ஆளில்லா குட்டி விமானம்

May 13, 2016

மனிதன் எவ்வளவு முன்னேறினாலும், அறிவியல் எந்த அளவிற்கு முன்னேற்றம் அடைந்தாலும், பசியை வெல்ல இன்னும் அவனுக்கு ஒரு வழி பிறக்கவில்லை என்பது உண்மையே.

மனிதனின் முதல் தேடல் உணவு. அதற்காகவே அவன் தன் இருப்பிடத்தை விட்டு வெளியே செல்ல வேண்டியிருந்தது. அதில் ஆரம்பித்தது தான் தேடல், போர், வெற்றி, தான் தனது என்ற கொள்கைகள் எல்லாம். ஆனால் அவை இன்னும் ஓய்ந்த பாடில்லை.

நிலவைத் தாண்டி மனிதன் சென்று கொண்டிருந்தாலும், உணவுக்கும் குடிநீருக்கும் வழி தேடித்தான் செல்கிறான்.

வடஅமெரிக்கா கண்டத்தின், கனடாவில், உள்ளது குபெக் என்னும் ஊரில் இன்டர்நெட் உதவியுடன் ஆடுகளை மேய்த்து உள்ளது டிரோன் என்னும் சிறிய ஆளில்லா குட்டி விமானம்.

டேவிட் பிரிஹெட், என்பவர் ஆளில்லா குட்டி விமானங்கள் செய்து அதில் சிறு ஆராயிச்சிகள் செய்வது வாடிக்கையாகக் கொண்டுள்ளார். அதில் ஒன்றுதான் இந்த முயற்சி. டிரோன் சுற்றி சுற்றி அட்டுகளைப் பட்டி நோக்கி மேய்த்துச் செல்வது பார்ப்பதற்கு மிகவும் வேடிக்கையாக உள்ளது.

இது பற்றி டேவிட் கூறுகையில், “எனது நண்பரது பண்ணையில் ஆடுகள் வளர்க்கப்பட்டு வந்தன. எனேவ ஆடுகள் மேய்க்க த்ரோன்ஐ பயன்படுத்தினால் என்ன என்று தோன்றியதும், அவரிடம்

இது பற்றி தெரிவித்தேன். அவரும் உடனே அதற்கு அனுமதி கொடுத்தார். எனது ஆராய்ச்சி வெற்றியில் முடிந்தது’ என்றார். இனி ஆடு மேய்க்கத்தான் லாயிக்கு என்று யாரும் யாரையும் சொல்ல முடியாது.

மேலும் படிக்க