• Download mobile app
08 Apr 2026, WednesdayEdition - 3710
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆசிய அளவிலான தடகள போட்டிக்கு கோவையை சேர்ந்த பள்ளி மாணவர் தேர்வு

March 16, 2023 தண்டோரா குழு

கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த ராஜசேகரன்- ராஜேஸ்வரி ஆகியோரின் மகன் யோகேஸ்வர். கோவைபுதூர் ஆஸ்ரம் மெட்ரிக் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வரும் இவர்,அண்மையில் கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற நடந்த 18-வது தேசிய அளவிலான தடகள போட்டியில் யோகேஸ்வர் 2-வது இடம் பிடித்து வெள்ளி பதக்கம் பெற்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த வீர்ர்கள் கலந்து கொண்ட போட்டியில்,3000 மீட்டர் தூர ஓட்டப்பந்தயத்தில் 8 நிமிடம் 36 வினாடிகளில் கடந்து வெள்ளி பதக்கத்தை பெற்ற கோவையை சேர்ந்த முதல் வீர்ரான, யோகேஸ்வர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.தேசிய அளவில் இரண்டாம் இடம் பிடித்த யோகேஸ்வர் அடுத்த மாதம் 27-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை உஸ்பெஸ்கிதானில் நடைபெற உள்ள 18 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசியன் இளையோர் அத்லெட்டிக் போட்டியில் விளையாடுவதற்கும் தகுதி பெற்றுள்ளார்.

ஆசிய விளையாட்டு போட்டிக்கு தகுதி பெற்றுள்ள அவருக்கு ஆஸ்ரம் மெட்ரிக் பள்ளியின் தாளாளர் தேவேந்திரன் மற்றும் நிர்வாகி கவுரி உதயேந்திரன் ,பள்ளி முதல்வர் சரண்யா மற்றும் ஆசிரிய,ஆசிரியைகள் மாணவர்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

இதற்கு முன்னரே மாவட்ட,மாநில,தேசிய அளவில் நடைபெற்ற பல்வேறு ஓட்டப்பந்தய போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றிகளை யோகேஸ்வர் குவித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

மேலும் படிக்க