• Download mobile app
24 Mar 2026, TuesdayEdition - 3695
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆசிபா கொலைக்கு நீதி கேட்டு கோவையில் வழக்கறிஞர்கள் ஆர்பாட்டம்

April 16, 2018 தண்டோரா குழு

ஆசிபா கொலைக்கு நீதி கேட்டு கோவையில் வழக்கறிஞர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பாக கூடிய 30க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஆசிபா கொலையாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க கோரி கண்டன முழக்கங்களை எழுப்பினர். மேலும் ஆசிபா கொலைக்கு நீதி கேட்டும், எஸ்.சி, எஸ்.டி சட்டத்தினை பாதுகாக்க வலியுறுத்தியும், சட்டக்கல்லூரி மாணவி பிரியா மீதான இடைநீக்க உத்தரவை ரத்து செய்யக்கோரியும் பதாகைகளை ஏந்தியிருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர் ஆனந்தன்,

சிறுமி ஆசிபா மற்றும் உன்னாவ் சிறுமி ஆகியோருக்கு உரிய நீதி கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்தார். மேலும் பாலியல் வன்முறை தொடர்பாக பேசியதற்காக மாணவி இடைநீக்கம் செய்யப்பட்டது அரசியல் சாசனம் அளித்துள்ள பேச்சுரிமை மற்றும் கருத்துரிமைக்கு எதிரானது எனவும் எனவே அவர் மீதான நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் எனவும் வலியுறித்தினார்.

மேலும் படிக்க